Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*எந்த வகைக் கீரையும், பருப்பும் சேர்த்து கூட்டு செய்யும்போது அடுப்பிலிருந்து இறக்கும் போது சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கினால் சுவையாக இருக்கும்.

*குங்குமப்பூ, சிறிதளவு கேசரிப் பொடி சேர்த்து சர்க்கரைப் பாகு காய்ச்சி அதில் ரசகுல்லாவை ஊற வைத்தால் நிறம், மணம் இரண்டுமே ஆளை அசத்தும் விதத்தில் இருக்கும்.

*தோசை வார்க்கும் முன் ஒரு கரண்டி தேங்காய்ப்பால் கலந்து வார்த்தால் மிகவும் சாஃப்டாக வரும்.

- இந்திராணி தங்கவேல், சென்னை.

*குழந்தைகளுக்கு ‘சூப்’ தயாரிக்கும் போது அதில், ஒரு தேக்கரண்டி கேழ்வரகு மாவு கலந்திடுங்கள். ஆரோக்கியமானது.

*அரிசி மற்றும் தானியங்கள் வைக்கும் டப்பாவில் வெள்ளைப் பூண்டோ அல்லது மஞ்சள் துண்டையோ போட்டு வைத்தால் பூச்சிகள் அண்டாது.

* சூப் மற்றும் கிரேவியுடன் சேர்க்க உங்களிடம் கிரீம் இல்லையென்றால் அதனுடன் வெண்ணெய் அல்லது பாலை கலந்து உபயோகப்படுத்தலாம்.

*இலையுடன் கூடிய காய்கறிகள் ஃப்ரெஷ்ஷாக இருக்க செய்தித்தாள்களில் சுற்றி வைக்கவும்.

- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

*இட்லி மாவு புளித்துவிட்டால் மாவில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கவும். சில மணி நேரம் கழித்து பார்த்தால், மேலே தெளிந்து தண்ணீர் நிற்கும். அதனை வடிகட்டினால், புளிப்பு தன்மை குறைந்து விடும்.

*கடலை மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து அதனைக் கொண்டு சமையல் மேடையை தேய்த்து கழுவினால் எண்ணெய் பசை முற்றிலும் நீங்கும்.

- ம.வசந்தி, திண்டிவனம்.

*காய்கறிகள் வதக்கும் போது எண்ணெய் அதிகமாகி விட்டால், அதில் கொஞ்சம் கொள்ளு மாவை தூவிவிட்டால் அதிக எண்ணெயை அது உறிஞ்சிவிடும்.

*உளுந்து வடை செய்யும்போது மாவுடன் சிறிது சாதம் சேர்த்து அரைத்தால் சுவை கூடும். எண்ணெய் அதிகம் செலவாகாது.

*பூசணி துருவலை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து அல்வா செய்தால் சுவைகூடும்.

- எஸ்.ராஜம், ஸ்ரீ ரங்கம்.

*இட்லிக்கு ஊற வைக்கும் பொழுது அரிசியுடன் ஒரு பிடி அவலையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் இட்லி பூப்போல இருக்கும்.

*ஜவ்வரிசியை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு அடை, வடை, தோசை செய்யும் போது சிறிது ஜவ்வரிசி மாவையும் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.

*லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

*கோதுமையை நன்கு கழுவி, நான்கு மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

* தயிர் பச்சடி, சாலட் போன்றவை தயார் செய்யும் போது தேங்காய் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டினால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

- கே.எல்.புனிதவதி, கோவை.

* உப்பு கலந்த நீரில் தக்காளி, எலுமிச்சையை போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது.

*சப்பாத்திக்கு மாவு பிசையும்போது தண்ணீருக்கு பதில் இளநீர் சேர்த்தால் சப்பாத்தி சுவை சூப்பராக இருக்கும்.

* முட்ைட ஆம்லெட்டுக்கு அடிக்கும் போது சிறிது பால் கலந்து அடித்தால் ஆம்லெட் சுைவயே தனிதான்.

*அடை மாவுடன் கார்ன் பிளேக்ஸ் கலந்து செய்தால், மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

- க. நாகமுத்து, திண்டுக்கல்.

காய்கறி மோமோஸ்

தேவையானவை

மாவு தயாரிக்க:

மைதா - 1 கப்,

உப்பு - 1/2 தேக்கரண்டி,

எண்ணெய் - 2 தேக்கரண்டி.

மோமோஸ் நிரப்ப:

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,

வெங்காயம் - 1,

பூண்டு - 2 பற்கள்,

இஞ்சி - 1 துண்டு,

குடை மிளகாய்,

கேரட் - தலா 1,

துருவிய முட்டைக்கோஸ் - 1/2 கப்,

உப்பு - சுவைக்கு,

மிளகு - 1 தேக்கரண்டி,

வினிகர் - 1 தேக்கரண்டி,

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி,

கொத்தமல்லி இலை - தேவையானவை.

மோமோஸ் சட்னி:

தக்காளி - 3,

காய்ந்த சிவப்பு மிளகாய் - 8,

எண்ணெய் - 1 தேக்கரண்டி,

பூண்டு - 2 பற்கள்,

இஞ்சி - 1 துண்டு,

உப்பு - சுவைக்கு,

சர்க்கரை - 1/2 தேக்கரண்டி.

செய்முறை: மாவு தயாரிக்க கொடுத்துள்ள பொருட்களைக் கொண்டு சப்பாத்தி பதத்திற்கு மாவினை பிசைந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சியை சேர்த்து வதக்கவும். உடன் நறுக்கிய குடை மிளகாய், துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், உப்பு, மிளகுத்தூள், வினிகர், கொத்தமல்லி இலை, சோயா சாஸ், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். மாவில் சிறிய உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து உள்ளே மோமோஸ் கலவையை வைத்து மூடி வைக்கவும். இதனை இட்லி தட்டில் 10 நிமிடம் வேக வைக்கவும். சட்னிக்கு காய்ந்த மிளகாயை தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

தக்காளியை தண்ணீரில் கொதிக்க வைத்து தோல் நீக்கி மசிக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் நசுக்கிய தக்காளி, ெபாடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி வேகவைத்த காய்ந்த மிளகாய், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கி ஆறியதும், மிக்சியில் கொத்தமல்லி இலை சிறிது சேர்த்து நன்கு அரைக்கவும்.

- நாகஜோதி கிருஷ்ணன், சென்னை.