Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

*கேரட்டில் சூப் செய்யும் பொழுது, அதில் துளி சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் திக்காகவும், சுவையாகவும் இருக்கும்.

*எந்த வகை சட்னி அரைத்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.

*பஜ்ஜி போட காய்கறி இல்லாவிட்டால் சப்பாத்தி மாவை நமக்கு வேண்டிய வடிவத்தில் நறுக்கி பஜ்ஜி மாவில் தோய்த்தெடுத்துப் பொரித்தால் சுவை அதிகமாக இருக்கும்.

*மைக்ரோ ஓவனில் மீண்டும் சூடுசெய்யும் போது சாதம், பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்து பின்னர் சூடு செய்தால் அவை வறண்டு போகாமல் பொல பொலவென இருக்கும்.- சௌமியா சுப்ரமணியன், சென்னை.

* முறுக்கு மற்றும் தேன் குழல் செய்யும் போது ஏலக்காய் விதைகளை அரைத்து பின் மாவுடன் கலந்து செய்தால் மணமும் சுவையும் அதிகமாக இருக்கும்

* சமையலுக்கு தாளிப்பு செய்யும் போது கடுகு சேர்ந்தவுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தால் கடுகு வெடிக்கும் போது மேலே சிதறாமல் இருக்கும்.

* தோசை மாவுக்கு அரிசி, உளுந்து ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொறுமொறுவென இருக்கும்.- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* கோதுமை உள்ள பாத்திரத்தில் வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது

* காய்கறிகள் மற்றும் பழங்களை சிறிதளவு வெந்நீர் கலந்த நீரில் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்துவிடும்

* மீன் பொரிக்கும் போது வரும் வாசனை அருகிலுள்ள வீடுகளில் சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. மீன் பொரிக்கும் போது மெழுகுவர்த்தியை அடுப்பின் அருகில் ஏற்றி வைத்தால் மீன் பொரிக்கும் வாடை நம் வீட்டை தாண்டாது.- ம.வசந்தி, திண்டிவனம்.

* புளியை பானையில் போட்டு, அதன் மேல் கொஞ்சம் உப்பை தூவினால் புளி கெடாது. வாடாமலிருக்கும்.

* கேக் வேகவைக்கும் போது அதன் மேல் ஒரு பிரவுன் பேப்பர் போட்டு மூடினால் வெந்த கேக்கின் மேல் ஆடை கட்டாமல் இருக்கும்.

* புளி ரசம் வைக்கும் போது, மிளகுகளை சற்று அதிகம் வைத்து அரைத்து ரசம் செய்தால் ரசம் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

* வெங்காயத்தை நறுக்கி அதன் மேல் வெண்ணெய் தடவி வைத்தால் வெங்காயம் வாடாமல் இருக்கும். மறுநாள் சமையலுக்கு பயன்படுத்தலாம்.- எஸ்.கார்த்திக் ஆனந்த், திண்டுக்கல்.

* சுத்தமான கல் உப்பை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாது.

* பெருங்காயம் கெட்டியாக இருந்தால் அதனுடன் இரண்டு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் இளகிவிடும்.

* ஊறுகாய் பாட்டில்களில் பிளாஸ்டிக் அல்லது மர ஸ்பூன்களை போட்டு வைத்தால் ஊறுகாய் நீண்ட நாள் கெடாது.- எஸ்.விமலா சடையப்பன், திண்டுக்கல்.

* பட்டாணி சூப் செய்யும்போது ஒரு ஸ்பூன் அவலை வறுத்துப் பொடித்து சேர்த்தால் சுவையான ெகட்டியான சூப் கிடைக்கும்.

* பச்சரிசியில் இட்லி செய்தால் வெந்நீரில் ஒரு பங்கு பச்சரிசிக்கு பாதி பங்கு உளுந்தம் பருப்பை ஊறவைத்து அரைத்தால் போதும். இட்லி மிருதுவாக இருக்கும்.

* கோஸ் பொரியல் செய்யும் போது சிறிது பால் சேர்த்தால் ருசியாக இருக்கும். வாடை வராது.

* இளநீர் நிறைய இருந்தால் ஒரு வாளியில் தண்ணீர் விட்டு அதில் போட்டு வைத்தால் போதும். 2, 3 நாட்கள் வரை சுவை குறையாது. நீரும் வற்றாது.- எஸ்.ராஜம், ரங்கம்.

* வடகக்கூழில் கேரட், பீட்ரூட் சாறு கலந்து வடகம் செய்தால் இயற்கையான உடலுக்கு சத்தான நிற வடகம் ரெடி. உடலுக்கும் நல்லது.

* எந்த வடகம் ஆனாலும் கூழில் பால் சேர்த்து கலந்து செய்தால் வெண்மையாக இருக்கும்.

* வடகம் கூழில் உப்பு கூடிவிட்டால் அவலை ஊறவைத்து அரைத்து சிறிது ஜவ்வரிசியை வேகவைத்து கலந்தால் சரியாகும்.

* எந்த கூழ் வடகமானாலும் உப்பு சற்றுக் குறைவாகவே போட வேண்டும். காய்ந்ததும் உப்பு அளவு சரியாக இருக்கும்.- எம்.வசந்தா மாரிமுத்து, சென்னை.