Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதழே... இதழே!

நன்றி குங்குமம் தோழி

பெண்களின் உதடுகளை மலரின் இதழ்களுக்கு ஒப்பிடுவார்கள். பெண்கள் நன்றாக உடை உடுத்தி, அழகு செய்து கொண்டாலும் உதடுகளை மிகவும் முறையாக பராமரிக்க வேண்டும். அதை பராமரிக்க சில எளிய முறைகளை கையாண்டால் போதும். உதடுகளும் இயற்கையான அழகு பெறும்.

*பீட்ரூட்டை நறுக்கி, அதன் சாறை உதடுகளில் பூசி வந்தால் உதடுகள் சிவப்பழகு பெறும்.

*உதடுகளில் வெண்ணெயைப் பூசி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

*கொத்தமல்லி கீரையை சாறு எடுத்து இரவில் உதடுகளில் பூசி வந்தால் உதடுகள் கருப்பு நிறமாக இருந்தாலும் சிவப்பு நிறமாக மாறிவிடும்.

*ரோஜாப்பூவின் இதழ்களை நசுக்கி, சாறெடுத்து உதடுகளில் பூசிவர உதடுகள் சிவப்பாக காட்சி தரும்.

*ரோஜாப்பூவின் இதழ்களை பால் விட்டு அரைத்து உதடுகளில் பூசிவர சிவப்பாக மாறி விடும்.

*உதடுகளில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்பைப் போக்க பாலாடையை தினமும் தடவி கழுவி வந்தால் போதும்.

*கிளிசரின் மற்றும் பன்னீரை கலந்து அந்தக் கலவையை உதடுகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாகும்.

*நில ஆவாரை, எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து உதடுகளில் தடவி, ஊறவைத்து, கழுவி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி வளப்புடன் காட்சி தரும்.பக்க விளைவுகள் இல்லாத எளிய முறைகளை கையாண்டு அழகுடன் காட்சி தரலாம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.