Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டில் செய்யும் எளிய வைத்தியம்!

நன்றி குங்குமம் தோழி

* காய்ந்த திராட்சை பழத்தினை பசும்பாலில் ஊற வைத்து ½ மணி நேரம் கழித்து சாறை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தீரும்.

* மாங்கொட்டைப் பருப்பை உலர்த்தி, தூள் செய்து தேன் சேர்த்து சாப்பிட கொடுத்தால் வயிற்றில் உள்ள குடல் பூச்சி வெளியேறும்.

* துளசி இலை, அதிமதுரம் சம அளவு எடுத்து, இரண்டையும் மை போல அரைத்து, தாயின் மார்பு காம்புகளில் தடவிய பிறகு குழந்தையை பால் குடிக்க வைத்தால், குழந்தை நன்றாக விரும்பி பால் குடிக்கும்.

* நெல்லிக்காய் சாறு பிழிந்து குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுத்துவர கண் சூடு உடனே குணமாகும்.

* அம்மான் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வர வயிற்றுப்புண் ஆறும். பொன்னாரை விதையை பசும்பாலுடன் மைய அரைத்தும் கொடுக்கலாம்.

* பூண்டுடன் ஓமம் பொடி செய்து கஷாயம் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குணமாகும்.

* செம்பருத்திப் பூவை உலர்த்தி, பொடியாக்கி அதைக் கற்கண்டு தூளுடன் சேர்த்து தினசரி பாலில் கலக்கி வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் பலம் பெரும்.

* வசம்பு இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து குழந்தைகளுக்கு தேய்த்துக் குளிப்பாட்டி வர குழந்தைகளுக்கு எந்த நோயும் அண்டாது.

* ஓமம், வசம்பு, மஞ்சள், இந்துப்பு, அதிமதுரம், சீரகம், திப்பிலி, சுக்கு சமஅளவு எடுத்து தூள் செய்து, தினசரி ஒரு சிட்டிகை பசும் நெய்யில் கலந்து காலையில் கொடுத்து வந்தால் குழந்தைகள் கெட்டிக்காரக் குழந்தைகளாக மாறி விடுவார்கள்.

*சுக்கை வெந்நீரில் நனைத்து கல்லில் உறைத்து 2 வேளை நெற்றியில் பற்று போட்டால் மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.

தொகுப்பு: ஆர்.உமா, ஈரோடு.