Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ரோஸ்மேரி!

நன்றி குங்குமம் டாக்டர்

ரோஸ்மேரி எண்ணெயில் ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் உர்சோலிக் அமிலம் போன்ற கலவைகள் உள்ளன. அவை உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது என சமீபத்திய ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ரோஸ்மேரியின் எண்ணெய் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, முடி உதிர்வதையும் தடுக்கிறது. இது குறித்து பார்ப்போம். டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (டிஹெச்டி) என்பது சில நபர்களில் முடி உதிர்தல் மற்றும் இழப்புக்குக் காரணமான ஹார்மோன் ஆகும். ரோஸ்மேரியில் உர்சோலிக் அமிலம் உள்ளது, இது DHT உற்பத்தியைத் தடுக்க உதவுகிறது, இதனால் முடியைப் பாதுகாக்கிறது மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ரோஸ்மேரியில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது முடி வேர்களை வலுப்படுத்த உதவும். இது முடி உடைவதைத் தடுக்கும் மற்றும் முடியின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அடிப்படையில் இருந்து மேம்படுத்துகிறது.ரோஸ்மேரியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் எரிச்சலூட்டும் பண்பை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் பொடுகை குறைக்கவும் முடியும். ஆரோக்கியமான உச்சந்தலை என்பது முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. இது புதிய முடியை செழித்து வளர பெரிதளவு

உதவுகிறது.ரோஸ்மேரியில் உள்ள தனித்துவ நன்மைகள் தலைமுடியை மென்மையாக்க பெரிதளவு உதவும். மேலும் பளபளப்பாக்கும். இது உங்கள் முடியின் இயற்கையான நிறத்தை அதிகரிக்கும்.

ரோஸ்மேரி எண்ணெயை பயன்படுத்தும் வழிகள்

சில துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ளவும். இதை உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும். 30 நிமிடத்திற்கு பின் ஷாம்பூ போட்டு குளிக்கலாம்.

ரோஸ்மேரி கண்டிஷனர்

ரோஸ்மேரி இலைகளை தண்ணீரில் வேகவைத்து, அதை ஆறவிடவும். ஷாம்பூ போட்டுக் குளித்த பின் இறுதியாக ரோஸ்மேரி தண்ணீரில் தலையை அலசவும். இது தலை முடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.

ரோஸ்மேரி ஹேர் மாஸ்க்

ரோஸ்மேரி எண்ணெய்யை தயிர் அல்லது முட்டை போன்ற பிற இயற்கைப் பொருட்களுடன் சேர்த்து ஊட்டமளிக்கும் ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம். இந்த ஹேர் மாஸ்க்கை 30-60 நிமிடங்கள் தலையில் ஊறவிட்டு பின் கழுவவும்.ரோஸ்மேரியை உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உங்கள் வேர்களை வலுவாகவும் வைத்திருக்க உதவும்.

தொகுப்பு: ஸ்ரீ