Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருஞ்சீரக எண்ணெய்!

நன்றி குங்குமம் தோழி

வாழ்க்கை முறை மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு முறைகளால் பலரும் பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அந்தவகையில், தலைமுடி பிரச்னைகளும் அடங்கும். அதாவது முடி உதிர்வு, முடி வறட்சியடைதல், முடி உடைதல் போன்ற முடி சார்ந்த பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இதனைத் தவிர்க்க, சிலர் சந்தையில் கிடைக்கும் முடி பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் பல்வேறு இரசாயனங்கள் கலந்திருப்பதால், பயன்கள் பெரியளவில் கிடைப்பதில்லை.

இதற்கு சிறந்த தீர்வு நம் வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்துவதே. அந்த வகையில் முடி பராமரிப்பில் கருஞ்சீரக விதைகள் பெரிதும் உதவுகிறது. கருஞ்சீரக விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முடிக்கு நல்ல பலனளிக்கிறது. கருஞ்சீரக எண்ணெய்யைப் பற்றி தெரிந்து கொள்வோம்.நைஜெல்லா சாடிவா என்ற தாவரத்திலிருந்து கருஞ்சீரக விதைகள் பெறப்படுகிறது. இது, கருப்பு விதைகள் அல்லது கலோஞ்சி விதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த கருஞ்சீரக விதைகள் உடல் எடையிழப்புக்கு மிகச்சிறந்த தேர்வாகவும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

மேலும், கருஞ்சீரக விதைகளைக் கொண்டு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவது கூந்தலின் நிறத்தை மேம்படுத்தவும், முடி உதிர்வை தடுத்து வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.

கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை

கருஞ்சீரகத்தைக் கொண்டு எண்ணெய் தயார் செய்ய, முதலில் அரை கப் அளவிலான கருஞ்சீரக விதைகளைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன்பிறகு 1 கப் அளவிலான பாதாம், ஆர்கன் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு சுத்தமான கண்ணாடி பாட்டிலில் கருஞ்சீரக விதைப் பொடி மற்றும் எண்ணெய்யை கருமை நிறமாக மாறும் வரை நன்கு கலக்க வேண்டும்.பிறகு இதை சூடான இடத்தில் இரண்டு வாரங்கள் வரை வைத்துவிட விட வேண்டும்.

அதன் பின், விதைகளை வடிகட்டி, மீண்டும் எண்ணெயை வேறு பாட்டிலில் மாற்றிக் கொள்ள வேண்டும். கருஞ்சீரக எண்ணெய் தயார். இந்த எண்ணெயை மற்ற எண்ணெய்களுடன் கலக்காமல் நேரடியாக தலையில் தடவுவது கூடுதல் பலனை தரும். கருஞ்சீரக எண்ணெய் முடி வளர்ச்சி சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை

பராமரிக்கலாம்.

தொகுப்பு: ஸ்ரீ