Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்த தீபாவளிக்கு 11 ரக பட்டுப்புடவை!

நன்றி குங்குமம் தோழி

பட்டுப்புடவை இல்லாத தீபாவளியா? என்று ேகட்கும் வகையில் பெண்களுக்காகவே இந்த வருடம் தீபாவளிக்கு 11 புதுரக பட்டுப்புடவைகளை ஆர்.எம்.கே.வி அறிமுகப்படுத்தியுள்ளது. 1924ல் திருநெல்வேலியில் ஆர்.எம்.கே.வி துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை 100க்கும் மேற்பட்ட புடவைகளை அறிமுகம் செய்துள்ளனர். அதன் வரிசையில்... கடுக்காய், நெல்லிக்காய், மாதுளை, மல்பரி போன்ற நூற்றக்கும் மேற்பட்ட தாவரங்கள், தாதுக்களை பயன்படுத்தி 4000 விதமான இயற்கை வண்ணங்களை தொகுப்பாக அமைத்து தங்களின் சாதனைப் பட்டுப்புடவையை அறிமுகம் செய்துள்ளனர்.

குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிட்டுள்ள 99 பூக்களை பட்டுப்புடவையில் ஜரிகையால் நெய்து தனித்துவமான புடவையாக உருவாக்கிஉள்ளனர். நம் மண்ணின் மகத்துவம் பேசுகிறது இந்தப் புடவை.கடுக்காய், மல்பெரி, மரப்பிசினில் இருந்து இயற்கை வண்ணங்களை உருவாக்கி பட்டுப் புடவையின் முந்தானையில் கற்பக விருட்சத்தை அழகாக நெய்துள்ளனர். இந்தாண்டு உலகளாவிய வண்ணம் peach fuzz. ஞானம் மற்றும் அமைதியின் அடையாளமான இந்த வண்ணத்தினை மாதுளை ஓடு, மரப்பிசின் போன்ற இயற்கைப் பொருட்கள் கொண்டு உருவாக்கி, புடவையின் முந்தானை மற்றும் பார்டரில் அற்புதமாக படைத்திருக்கிறார்கள்.

மயிலின் நீலம், கருஞ்சிவப்பு இரண்டு வண்ணங்களை இணைத்து பாரம்பரியமிக்க கலம்காரியில், குதிரை வடிவங்களை புடவையின் பார்டர் மற்றும் முந்தானையில் செய்து பட்டோவியமாக கொடுத்துள்ளனர்.மென்பிங்க் வண்ணத்தில் முகலாயர் காலத்து பூக்கள் மற்றும் மண்டாலா குறியீடுகள் இணைத்து பண்டிகை காலத்திற்கு ஏற்ப நெய்யப்பட்டதுதான் மண்டாலா கலை வடிவ பட்டுப்புடவை.வெளிர் மஞ்சள் நிறத்தில் பூ ஜோடி தொழில்நுட்பத்தில் மஸ்டர்ட், ஆரஞ்ச், மெரூன், பிங்க் வண்ணத்தில் பார்டர் அமைக்கப்பட்ட அற்புதமான பட்டுப்புடவை.விரிடியன், நீலம் மற்றும் பச்சை கலந்த அரிய வண்ணம்.

இந்த நிறத்தினை 11 இஞ்ச் அளவில் பார்டரில் பாரம்பரிய தாமரை மற்றும் பன்னீர் செம்பு புட்டாக்கள் கொண்ட அழகிய வண்ண பட்டுப்புடவை.லினோ... எடை குறைவான புடவைகள். வழக்கமான பட்டுப்புடவைகளில் இருந்து 40% எடை குறைவாக இருக்கும் இந்தப் புடவைகள் அணிவதற்கு இலகுவாக இருக்கும். இதில் லினோ செக், லினோ கட்வர்க் மற்றும் லினோ வர்ணா என்ற தொகுப்பினை அறிமுகம் செய்துள்ளனர்.தனித்துவமான பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்வது மட்டுமில்லாமல், நெசவாளர்கள் குறிப்பாக பெண்கள் எளிதாக நெய்யும் வகையில் புதிய தொழில்நுட்ப தறியினை நெசவாளர்களுக்கு அளித்துள்ளனர் ஆர்.எம்.கே.வியினர். இதன் மூலம் அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு துணையாக இருந்து வருகிறார்கள்.

தொகுப்பு:ரிதி