Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இண்டக்ஷன் ஸ்டவ் எவ்வாறு பயன்படுத்தலாம்!

நன்றி குங்குமம் தோழி

கேஸ் அடுப்பு இருந்தாலும், இண்டக்‌ஷன் அடுப்பு ஒன்றும் அனைவரின் வீட்டிலும் இருப்பது வழக்கமாகிவிட்டது. கேஸ் அடுப்புகளில் காய்கறி வெந்து கொண்டிருந்தால், இதில் அரிசி அல்லது பருப்பினை எளிதில் வேகவைக்க முடியும். மேலும் வேலையும் எளிதாகவும் சீக்கிரம் நடக்கும் என்பதற்காகவே பலரும் தங்கள் வீட்டில் இண்டக்‌ஷன் அடுப்பினை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது மின்சாரம் மூலம் இயங்குவதால் இதனை பராமரிக்கும் முறையில் நாம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

* ஸ்டவ்வை ஆப் செய்த உடனே மின் இணைப்பை ஆப் செய்யக் கூடாது. ஸ்டவ்வில் உள்ள விசிறி சற்று நேரம் சுற்றி ஸ்டவ்வின் மேல் பகுதியை குளிர்படுத்திய பிறகுதான் ஆப் செய்ய வேண்டும்.

* இண்டக்‌ஷன் ஸ்டவ்வுக்கான மின் எவ்வளவு ஆம்பியர், பிளக்கிற்கு ஏற்றதுதானா என்பதை அறிந்து அதன் பிறகு பயன்படுத்துதல் வேண்டும்.

* கரப்பான் உட்பட எந்தப் பூச்சியும் ஸ்டவ்வுக்குள் போகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அதன் மதர்போர்டுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

* பொதுவாக பத்திலிருந்து பதினைந்து கிலோ வரை உள்ள எடையை தாங்கும் அளவிற்கு இண்டக்‌ஷன் ஸ்டவ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அதிக எடையினை ஸ்டவ்வில் ஏற்றக்கூடாது, அவ்வாறு செய்தால் விரிசல் ஏற்படும்.

* கையேட்டுப் புத்தகத்தில் உள்ள தகவல்களை ஒரு முறைக்கு பலமுறை படித்து மனதில் ஏற்றி அதன்படி பயன்படுத்துங்கள்.

* ஆன் செய்த நிலையில் ஸ்டவ்வை நகர்த்த வேண்டாம். அதே போல் அதன் மேல் காலியான பாத்திரத்தை வைத்து பயன்படுத்தக்கூடாது.

* மின்னணுப் பொருட்களை ஸ்டவ்வுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது. முக்கியமாக செல்ேபானை அருகில் கொண்டு செல்லாதீர்கள். ஸ்டவ்வில் காந்தப் பரப்பு உள்ளதால், எதிர்வினையாக மாற வாய்ப்புள்ளது.

தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.