Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

பொதுவாக குளிர் காலம் வந்தாலே போதும் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்னைகள் எளிதில் வரும். அதேபோல, இன்னொரு பிரச்னை என்னவென்றால் குளிர் காலம் நம் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தும். அதிக குளிர் காரணமாக சருமத்தில் ஈரப்பதம் குறையும், அதுவே சரும வறட்சிக்கு காரணமாகிறது. சரும வறட்சியை போக்க மாய்ஸரைசர், எண்ணெய் போன்றவற்றை தேய்த்துக் கொள்ளலாம். இதுபோன்ற காலங்களில் சருமம் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு உச்சந்தலையும் பாதிக்கப்படும்.

உங்கள் முடி வறண்டு, செதில்களாக மாறும் வாய்ப்புள்ளது. எனவே குளிர்காலங்களில் எப்போதும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நம்மில் பலர் குளிர் காலங்களில் சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறோமே தவிர கூந்தல் பராமரிப்பு குறித்து மறந்துவிடுகிறோம். குளிர் காலத்தில் தலைமுடியை எவ்வாறு பராமரிப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை தவிர்க்கக் கூடாது

உங்கள் தலைமுடி வேரில் இருந்து நுனி வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் தண்ணீர் குடிப்பதை தவிர்க்கக்கூடாது. ஆரோக்கியமான கொழுப்புகளான பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பூசணி விதைகள் மற்றும் பல நட்ஸ் வகைகளை சாப்பிட வேண்டும். இவை தலைமுடிக்கு தேவையான புரதத்தை கொடுக்கின்றன. தலைமுடியை உள்ளே இருந்து வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும். புரதம் தலைமுடி உடைவதை குறைக்கும்.

தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டும்

தலையில் அடிக்கடி எண்ணெய் தடவும் போது குளிர் கால காற்றினால் உங்கள் கூந்தல் சேதமடையாமல் தடுக்க முடியும். தலைக்கு குளிக்க செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு தலையில் எண்ணெய் தேய்த்து ஊற வைக்கலாம். தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது மிகச்சிறந்தது.

கண்டிஷனிங்

கூந்தல் உடையாமல் இருக்க எண்ணெய் தடவுவது எந்த அளவுக்கு முக்கியமோ, கூந்தல் வறட்சியை தடுக்க கண்டிஷனிங் செய்வதும் அவசியம். தலை குளிக்கும் போது கண்டிஷனிங் பயன்

படுத்துவதை தவிர்க்கக்கூடாது. தயிருடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய், வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை சேர்த்து கூந்தலில் தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசலாம். முட்டையின் வெள்ளை கருவை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.

வெந்நீரில் தலைக்கு குளிப்பதை தவிர்க்கவும்

குளிர் காலங்களில் சுடு தண்ணீரில் குளிப்பது வழக்கம். சுடு தண்ணீரில் தலை முடியை அலசும் போது, உடைய வாய்ப்புள்ளது. உச்சந்தலையில் செதில்களாகத் தோன்றுவதைத் தவிர்க்க, வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை அலசுங்கள்.

எண்ணெய் பயன்படுத்தவும்

வறண்ட காற்று கேசத்தை பாதிக்கும் என்பதால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது அவசியம். குளிர் காலத்தில் முடி வறட்சிக்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அதை எப்போதும் நீரேற்றத்துடன் வைப்பது முக்கியம். இதை சரி செய்ய கன்டிஷனரை பயன்படுத்துவது அவசியம். இது ஈரப்பதத்தை மீட்டெடுத்து தலைமுடிக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

குளிர் காலத்தில் தலைமுடியை

பராமரிக்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தவும். இது குளிர் காலத்தில் தலைமுடியின் வேர் வரை ஊடுருவி, உள்ளிருந்து தலைமுடியை பாதுகாக்க உதவுகிறது.