Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நேர்முகத் தேர்வுக்கு செல்பவர்கள் கவனிக்கவும்!

நன்றி குங்குமம் தோழி

நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும் என்றால், 2 நாட்களுக்கு முன்பே வயிற்றில் பட்டாம்பூச்சிப் பறக்க ஆரம்பித்து விடும். எந்த உடை உடுத்துவது, எப்படி உட்கார வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று மனதில் பல முறை ஒத்திகை பார்ப்போம். சரியாக நடந்துகொள்வதை விட தவறான நடத்தைகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.

* சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும்: நேரம் தாமதமாக செல்லக்கூடாது. இன்டர்வியூ என்னும் பொழுது பயந்து ரொம்பச் சீக்கிரமாக சென்றுவிடுவார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாகப் போனால் போதுமானது.

* அதிகம் பேசுவது: தேர்வாளர்கள் இளையவராகவும், கலகலப்பாக பேசுபவராகவும் இருந்தால், ஃப்ரீயாகப் பேச ஆரம்பித்துவிடாதீர்கள். கேட்ட கேள்விற்கு முழுமையாக பதில் சொன்னால் மட்டும் போதுமானது.

* அனாவசியப் பொருட்களை உடன் எடுத்துச்செல்லக்கூடாது: குடை, ரெயின் கோட், வழியில் வாங்கியப் பொருட்கள், புத்தகங்களை கையில் கொண்டு சென்றால், வெளியே ஆபீசில் வைத்துவிட வேண்டும். தேவையான பேப்பர்கள் கொண்ட ஃபைலில், ஒரு சின்ன கைப்பையை தவிர வேறு எதுவும் கையில் இருக்க வேண்டாம்.

* அதிக அலங்காரம்: ரொம்ப ப்ரைட் நிறங்களில், கவர்ச்சியாக உடை உடுத்தி, அதிக மேக்கப், நகைகளை தவிர்க்க வேண்டும். வெளிர் நிற ஆடைகளே தகுந்தது.

*உரிமை எடுத்துக்கொள்ளல்: தேர்வாளர் உட்காரச் சொன்னால் அன்றி தானாக உட்காரக் கூடாது. அவரைப் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது.

* எதிர் இன்டர்வியூ செய்தல்: தேர்வின் போதே சம்பளம், லீவு, ப்ரமோஷன் குறித்து கேட்பதை தவிர்க்க வேண்டும்.

* குற்றம் சொல்லும் குணம்: நீங்கள் முன்பு வேலை பார்த்த அல்லது இப்பொழுது வேலை பார்க்க இருக்கும் நிறுவனத்தைப் பற்றி தவறாக சொல்லக்கூடாது. கம்பெனி ரகசிய உள் விவகாரத்தை குறித்தும் பேசக்கூடாது.

* திறமையை மிகைப்படுத்தல்: நான் அதிமேதை, எதையும் சாதித்து விடுவேன் என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டாம்.

பட்டப்படிப்பு படித்திருந்தாலும், வேலை கிடைப்பது என்பது ‘குதிரைக் கொம்பாக’ உள்ளது. அதனால் நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போது மேற்கூறியக் கொள்கைகளை கடைபிடிப்பது அவசியம்.

தொகுப்பு: என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.