Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சுற்றுலா போறீங்களா? உங்களுக்குதான் இந்த டிப்ஸ்!

நன்றி குங்குமம் தோழி

*குடும்ப நபர்கள் சேர்ந்து செல்லும் சுற்றுலா, குழுவாக செல்வது, எதில் சென்றாலும் மிக முக்கியமான செயல் வீண் விவாதங்களை தவிர்ப்பது, ஏனெனில் 5 நாள், 10 நாள் என சேர்ந்திருக்க வேண்டிய நிர்பந்தங்கள் உள்ளதால் கூடியவரை இனிமையாக பேசுவது நல்லது.

*உறவினர் வீடுகளில் தங்க நேர்ந்தால் பழங்கதைகளில் நடந்தவற்றை பேசி, தர்மசங்கடநிலைமைகள் ஏற்படுத்தாமல், இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்கலாம்.

*குழந்தைகள் கூட வந்தால் ஒப்பிட்டு பேசுவதை கட்டாயம் தவிர்த்தல் நன்று.

*தினமும் சாப்பிட வேண்டிய மருந்துகள் மறக்காமல் எடுத்துச் செல்வதுடன், முதலுதவியாக ஜுரம், தலைவலி, பேதி நிறுத்தும் மாத்திரை என முதலுதவி பெட்டி வைத்திருத்தல் அவசியம்.

*டூர் கிளம்பும் முன், அணியக்கூடிய துணிகளில் ஜிப், பட்டன், பாவாடை நாடா, ஹுக் போன்றவை சரியாக உள்ளதை கவனிக்கவும்.

*‘ஜி’ பே மட்டும் நம்பாமல் கையில் கணிசமான பணம் எடுத்துச் செல்வது, ஊரில் இளநீர், நுங்கு என வாங்கும் போதும், சிறிய ஹோட்டல்கள், கையேந்தி பவன் என எல்லா இடத்திலும் பணம் கட்டாயம் தேவை. நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் கை கொடுக்கும்.

*சுட்டெரிக்கும் வெயில் காலம் என்றாலும் கைவசம் குடை இருப்பது திடீர் மழையில் இருந்து காக்கும்.

*குளிர் பிரதேசங்களுக்கு ஏற்றபடி ஷால், ஸ்வெட்டர், சாக்ஸ் உடன் எடுத்து செல்ல வேண்டும்.

*முக்கியமான குடும்ப நபர்கள், டூர் ஆபரேட்டர் எண்களை, தனியாக பேப்பரில் எழுதி எடுத்துச் செல்ல வேண்டும். மொபைலில் சார்ஜ் இல்லாமல் போனாலும், தொலைந்து போனாலும் மாற்று ஏற்பாடுகள் கைவசம் வைத்திருப்பது அவசியம். இவற்றை மனதில் வைத்து ஜாலியாக டூர் பிளான் செய்யுங்க.

தொகுப்பு: சீனு சந்திரா, சென்னை.