ஊத்தங்கரை, அக்.31: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பெரியதள்ளபாடி அருகே ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (25). இவரது மனைவி ஈஸ்வரி (20). கருத்து வேறுபாட்டால் ஈஸ்வரி, தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக ஏழுமலையை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி, ஈஸ்வரி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டில் இருந்த ஏழுமலையை காணவில்லை. அவரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈஸ்வரி சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


