தேன்கனிக்கோட்டை, அக்.18: கெலமங்கலம் அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதியில் மர்ம மநபர்கள் அடிக்கடி டிரான்ஸ் பார்மரை உடைத்து, அதிலிருந்த காப்பர் கம்பிகளை திருடி செல்கின்றனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசில் மின்வாரிய அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, எஸ்பி தங்கதுரை உத்தரவின்படி, டிஎஸ்பி ஆனந்தராஜ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கெலமங்கலம் அருகே ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்த கணேஷ் (20), அதே கிராமத்தை சேர்ந்த திருமலை (22), மாரண்டஹள்ளியை சேர்ந்த மாரியப்பன் (32) ஆகிய 3 பேரும் சேர்ந்து டிரான்ஸ்பார்மரை உடைத்து, காப்பர் கம்பிகளை திருடி விற்றது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று போலீசார் 3பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த காப்பர் கம்பிகள், காரை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர்.
+
Advertisement
