ஓசூர், டிச.1: ஓசூரில் அமைச்சர் முன்னிலையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் 2 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். ஓசூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவரான புருஷோத்தமரெட்டி, அச்செட்டிப்பள்ளி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாசரெட்டி, அதிமுக ஒன்றிய துணை செயலாளர் நவீன் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, அமைச்சர் சக்கரபாணி, ஓசூர் பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மேயர் சத்யா வரவேற்றார். அமைச்சர் சக்கரபாணி கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் முருகன், செங்குட்டுவன், மாவட்ட நிர்வாகிகள் சுகுமார், சின்னசாமி, ஜெயராமன், இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாஸ், கலை இலக்கிய அணி செயலாளர் மாதேஸ்வரன், ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, பகுதி செயலாளர்கள் ஆனந்தய்யா, ராமு, கோபி, ரமேஷ், தியாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

