Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசின் ஆன்மிக சுற்றுப்பயணம் கோவையில் இருந்து 30 பேர் காசி சென்றனர்

கோவை, டிச. 5: அரசின் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் கோவையில் இருந்து 30 பேர் காசி சென்றனர்.

தமிழ் நாடு அரசு ஆன்மிக சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு வயது மூப்பின் காரணமாகவும், இறைதரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 920 பக்தர்களை கடந்த 3 ஆண்டுகளில் அழைத்து சென்றுள்ளது.

இதற்கிடையே நடப்பாண்டில் 600 பக்தர்கள், இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு தமிழகம் முழுவதிம் இருந்து 600 பக்தர்களையும் ஆன்மிகப் பயணம் அழைத்து செல்ல உத்தரவிட்டது. அதற்கான செலவினத்தொகை ரூ.1.50 கோடியினை அரசு ஒதுக்கியது.

ராமேஸ்வரத்தில் இருந்து காசி வரை ஆன்மிகப்பயணம் நேற்று முதல் 12ம் தேதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. கோவையில் கோனியம்மன் கோயிலில் இருந்து 30 பக்தர்கள் நேற்று இந்த ஆன்மிகப் பயணத்தை தொடங்கினர்.