கோவை, டிச. 3: கோவை கணபதி புதூர் 10வது வீதியை சேர்ந்தவர் பழனி மகள் ஜோதி செல்வி (22). இவர் காந்திபுரத்தில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், ஜோதி செல்வி வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது நைசாக வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் டேபிள் மீது வைத்திருந்த செல்போனை திருடி கொண்டு தப்ப முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோதி செல்வி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் தப்பி செல்ல முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், திருட்டில் ஈடுபட்டது சொக்கம்புதூர் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

