கரூர், ஆக 1: வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகன் வீடு திரும்பவில்லை என தாய் போலீசில் புகாரளித்துள்ளார். கருர் வெங்கமேடு என்எஸ்கே நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி(70). இவர், வெங்கமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 24ம்தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற தனது மகன் வேலு இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து தேடுகின்றனர்.
+
Advertisement


