கரூர், நவ. 28: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பிரிவு அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பிரிவு அருகே குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், நடத்திய சோதனையில் 200 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராஜேஷ் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
+
Advertisement

