கரூர்,நவ.6: கரூரில் நாள் முழுவதும் லேசான மழை பெய்து வரும் நிலையில் கடும் குளிர் பொதுமக்களை வாட்டி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான மேகமூட்டம் காணப்பட்டது.சீதோசன நிலை( தட்பவெட்ப நிலை) மப்பும் வந்தாரமாக காட்சி அளித்தது.இதனால் பகல் வேளையிலும் பணிவாட்டி வதைத்து. இரவு ஏழு மணிக்கு பின் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் குளிர் வாட்டி வதைத்தது. பொதுமக்கள் நடமாட்டமும் குறைந்தது.
வெளியில் நடமாடிய பொதுமக்களும் சொட்டர், ரெயின் கோட் ஜெர்கின் அணிந்தவாரே சென்றனர்.

