பூதப்பாண்டி, டிச. 3: கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்டத்தில் 80 நிரந்தர மற்றும் 20க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்களும் பணியில் உள்ளனர். இதில் தற்காலிக தொழிலாளர்களுக்கு பால் வடிக்க தேவையான மரங்கள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் பால் வடிக்காமல் நிற்கும் மரங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை பால் வடிக்க தங்களுக்கு ஒதுக்குமாறு தற்காலிக பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த மரங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதாக தெரிகிறது. அவர்கள் நேற்று சம்பவ இடம் வந்து மரங்களை பார்த்து சென்றுள்ளனர். இதையடுத்து பால் வடிக்காமல் நிற்கும் மரங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். தனியாருக்கு வழங்கக்கூடாது என கூறி தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
+
Advertisement

