திருவனந்தபுரம், நவ. 1: இந்திய விமானப்படை மற்றும் வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பு இணைந்து நடத்திய சரக்கு ட்ரோன் கண்காட்சி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இந்திய வர்த்தக தொழில் துறை கூட்டமைப்புடன் இணைந்து தென்பிராந்திய விமானப்படை தலைமையகம் லட்சத்தீவு மற்றும் அந்தமானில் உள்ள மினிகாய் தீவுகளுக்கு ராணுவ உபகரணங்கள் மற்றும் மருந்து, உணவு உள்பட அத்தியாவசிய பொருட்களை ட்ரோன்கள் மூலம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கான சரக்கு ட்ரோன்கள் கண்காட்சி நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் நர்ம்தேஷ்வர் திவாரி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
தெற்கு பிராந்திய விமானப்படை தலைவர் ஏர் மார்ஷல் மனிஷ் கன்னா மற்றும் விமானப்படை உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களின் ட்ரோன்கள் இடம் பெற்றிருந்தன.
 
 
 
   