ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் என்ற இடத்தில் காட்டுப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில்ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பின்னர் இரவு முழுவதும் துப்பாக்கி சூடு நிறுத்தப்பட்ட நிலையில் நேற்று காலை மீண்டும் தொடங்கியது. இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என இன்னும் அடையாளம் காணப்படவில்லை.


