புதுடெல்லி: இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு கடந்த 2022ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி மியூசிக் நிறுவனம் மனுதாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் உள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக்கோரி இளையராஜா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன், ‘‘இளையராஜா தொடர்பான வழக்கினை மும்பை உயர்நீதிமன்றத்தில் இருந்து சென்னைக்கு மாற்றியமைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.