தேவையான பொருட்கள்
இட்லி - 4
பனீர் - 100 கிராம்
எண்ணெய் - பொரிக்க & தாளிக்க
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கடுகு - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வெட்டி வைத்த பனீரை சேர்த்து உப்பு போட்டு, தண்ணீர் தெளித்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு சிறிய துண்டுகளாக நறுக்கிய இட்லியை சேர்த்து கரம் மசாலா சேர்த்து கிளறவும். சுவையான இட்லி பனீர் ஃப்ரை தயார்.