Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ப்ரியங்களுடன்... பாட்டி வைத்தியம்

நன்றி குங்குமம் தோழி

*பித்தத்தை குறைக்க விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வரலாம்.

*குப்பைமேனி இலைச்சாறு அரைத்து தேய்த்து குளித்துவர தோல் நோய் குணமாகும்.

*அத்திக் காயை உட்கொண்டால் உதட்டில் வெடிப்பு குணமாகும்.

*ரத்தம் தூய்மையாகி கரப்பான் நீங்க கரும் செம்பை இலைச்சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.

*சுறுசுறுப்பாக இருக்க ரோஜா இதழ்களை சாப்பிட வேண்டும்.

*வாதவலி, இடுப்பு வீக்கம் தீர நொச்சி இலை, உத்தாமணி இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.

*வசம்பு தூளை காயத்தின் மீது தடவ வெட்டுக்காயம் ஆறும்.

*மூட்டு வலி தீர நொச்சி இலைச்சாறு, மிளகுத் தூள், நெய் சேர்த்து சாப்பிடலாம்.

*மலை வேம்பு இலையை அரைத்து தலையில் பூச பேன் ஒழியும்.

*கண்ணில் சதை வளருவதைத் தடுக்க பிரம்ம தண்டு இலைச்சாறு பால் ஒரு துளி கண்ணில் விடுவது பலன் தரும்.

*சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிட்டு வர சோகை தீரும்.

*சுக்குத் தூள் 5 கிராம், ஆப்ப சோடா 5 கிராம் தண்ணீர் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.

*பாகல் இலைச்சாறை தடவ உள்ளங்கால் எரிச்சல் தீரும்.

*கொன்றை வேர்பட்டை கஷாயம் குடித்துவர உடல் பலம் பெறும்.

தொகுப்பு: ஹெச்.ராஜேஸ்வரி, சென்னை.