Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எலுமிச்சை தண்ணீர் எந்த நேரத்தில் குடிக்கலாம்?

நன்றி குங்குமம் டாக்டர்

எலுமிச்சை கலந்த நீர் பல்வேறு நன்மைகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய பானமாகும். இவை நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கிறது. அதை எப்போது உட்கொள்வது என்பது பலருக்கும் குழப்பமாகவே உள்ளது. சிலர் இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் என்கின்றனர், ஒருசிலர் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்று கூறிவருகின்றனர்.

எலுமிச்சை தண்ணீர் வெறும் வயிற்றில் குடிக்கலாமா?

தினமும் காலையில் எழுந்ததும் எலுமிச்சை தண்ணீரை குடிப்பது செரிமான அமைப்பை சுத்தப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தைத் தொடங்கவும் உதவுவதாக பலரும் நம்புகின்றனர். மேலும் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் கூறுகின்றனர். எனவே, எலுமிச்சை தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். மேலும், இதற்கு குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை. அவரவர் உடல் தேவைக்கு ஏற்ப எலுமிச்சை தண்ணீரை எந்த நேரத்திலும் குடிக்கலாம்.

எலுமிச்சை நீர் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஈரப்பதமூட்டும் பானமாக நாள் முழுவதும் அனுபவிக்கலாம். இது சர்க்கரை குளிர்பானங்களுக்கு மாற்றான நல்ல ஆரோக்கியமானதாக இருக்கும் மற்றும் உடலில் வைட்டமின் சி சத்துக்களை அதிகரிக்க உதவுகிறது. மேலும் உணவுக்கு முன் எலுமிச்சை தண்ணீரைக் குடிப்பது செரிமானத்தைத் தூண்டவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவும்.

எலுமிச்சை தண்ணீரின் நன்மைகள்

நீர் இழப்பை தடுக்கிறது

எலுமிச்சை தண்ணீர் உடலில் ஏற்படும் நீர் இழப்பை தடுக்கிறது. அதிகப்படியான வேலை, அலைச்சல், உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் நீர் இழப்பை எலுமிச்சை தண்ணீர் சீர்செய்கிறது.

வைட்டமின் சி

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

எலுமிச்சை நீரின் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் வீக்கத்தைத் தடுக்கிறது.

எடை மேலாண்மை

வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை பழத்தை கலந்து குடித்து வர உடல் எடை குறையும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எலுமிச்சை தண்ணீர் வளர்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.

தொகுப்பு: ரிஷி