Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லோ சுகர் தடுக்கும் வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவதுதான் ஆபத்தானது. அது உடலில், உடனடி விளைவுகளை காட்டும். எனவே, அடிக்கடி ரத்த பரிசோதனைகளை செய்து பார்த்துக்கொள்வது நல்லது. அந்தவகையில், இதன் அறிகுறிகள் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்:

திடீர் சர்க்கரை அளவு குறைவின் அறிகுறிகள்

கை- கால் உதறல், உடல் சோர்வு, வியர்த்துப் போதல், மயக்கநிலை, மரத்துப்போதல், பேச்சில் தடுமாற்றம், உடல் சோர்வு, நீரிழிதல் அடிக்கடி சிறுநீர் கழித்தல், பதற்றம், கவனச்சிதறல் போன்றவைகளாகும். சர்க்கரை குறைய காரணங்கள் என்றால், சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருத்தல், தினசரி உணவில் புரதச்சத்துகள் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளுதல், மாத்திரை அல்லது இன்சுலின் போட்டு குறிப்பிட்ட நேரத்தில் உண்ணாதிருத்தல், சில நேரங்களில் கடுமையான பணிகளில் ஈடுபடும்போது சிலருக்கு ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிடும்.

சர்க்கரை அளவு குறையும்போது செய்ய வேண்டியவை

பொதுவாகவே, சர்க்கரை நோயாளிகள் குறைந்தளவு இனிப்புத் தன்மையுள்ள சாக்லேட்களை கையில் வைத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற சமயங்களில் ஓரிரு சாக்லேட்களை சாப்பிடுவது, ஜூஸ் போன்ற பானங்கள் அருந்துவது, சர்க்கரைத் தன்மையுள்ள பொருட்களை சிறிதளவு எடுத்துக்கொள்வது நல்லது.

அதுபோன்று, அளவில்லாமல் கார்பஸ் அதிகமாக உள்ள உணவுகளை உண்டுவிடக் கூடாது. உடனடியாக ஜீரணிக்க கூடிய சிறிதளவு உணவை உண்டுவிட்டு 15 நிமிடங்கள் கழித்து நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த குறிப்பிட்ட அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

5 கிராம் கார்பஸ் உள்ள உணவை சாப்பிட்டுவிட்டு 15 நிமிடம் கழித்து உங்கள் சர்க்கரை அளவு உயர்கிறதா அல்லது 70 மி.கி. அளவில்தான் தொடர்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு சரியான அளவுக்கு வரும்வரை 15-15 நிமிட இடைவெளியில் இதை செய்து வந்தால், எதிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவு குறையும்போது எவ்வளவு சாப்பிட வேண்டும் என தெரிந்துவிடும்.

தொகுப்பு: கவிதா பாலாஜி