Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தர்பூசணியின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி. அதிக நீர்ச்சத்து கொண்ட தர்பூசணி கோடைக்கேற்ற சஞ்சீவியாக பல பலன்களைத் தருகிறது. தர்பூசணியின் வேறு பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.இதய நலனைக் காக்கும் தர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகளவில் உள்ளது. இது ஃபிரிராடிக்லால் உண்டாகும் தீமைகளைக் குறைக்கும் தன்மை கொண்டது. இதயத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவும். தர்பூசணியில் பொட்டாசியம் அதிகளவு உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத் துடிப்பை சீராக்கும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும் தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.

கண்களைப் பாதுகாக்கும் தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன், சியாக்ஸன்தின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. இவை மாலைக்கண் நோய், கண்விழி மிகை அழுத்தநோய் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும்.

நீர் இழப்பு பிரச்னைகள் ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கிறது தர்பூசணி உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். தமனிகள் சிறப்பாக செயல்பட உதவும். எலும்புகளை பாதுகாத்து, ஆஸ்டியோபோரோசியைத் தடுக்கிறது.

தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக ஆற்றும் குணம் இதற்கு உண்டு.தர்பூசணியை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் எடை குறையும். இதிலுள்ள பீட்டா கரோட்டின் சருமத்துக்கு மிகவும் நல்லது. முகப்பரு பிரச்னையை சரி செய்கிறது.தர்பூசணியில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது. இது நமது மூளையில் பல வேதிப் பொருட்களை உற்பத்தி செய்ய உதவக் கூடியது. இந்த வேதிப் பொருட்கள்தான் நமது நடவடிக்கை மற்றும் மனநிலைக்கு காரணமாக. அமைகின்றன. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அமைதியைத் தருகிறது.

சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் சிறுநீர் வெளியேறும்போது சிரமம் கொடுக்கும் அமோனியாவை, கல்லீரலிலிருந்து வெளியேற்ற இது உதவும். மலச்சிக்கலுக்கு மருந்தாவதோடு, நெஞ்செரிச்சலையும் சரி செய்கிறது.இவ்வாறு பல நன்மைகள் தரும் தர்பூசணியை கோடையில் எடுத்துக் கொள்ள, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்