Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அலோபீசியா தடுக்க... தவிர்க்க!

நன்றி குங்குமம் டாக்டர்

அலோபீசியா என்பது முடி உதிர்தலைக் குறிக்கும் ஒருவகையான நோயாகும். அலோபீசியாவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அலோபீசியா அரேட்டா (திட்டு சொட்டை), தலையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொத்தாக முடி உதிர்ந்து அந்த இடத்தில் பளபளவென காணப்படும். மற்றொன்று அலோபீசியா டோட்டாலிஸ், இது உச்சந்தலையில் முழுமையான முடி உதிர்ந்து வழுக்கையாக காணப்படுவது ஆகும். இது ஒரு தன்னுடல் தாக்கி நோய் (autoimmune disease) ஆகும். இதில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் மயிர்க்கால்களைத் தாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது.

சில நேரங்களில், இந்த வகையான முடி உதிர்தலுக்கு வேறு மருத்துவப் பெயர்களும் உண்டு. அவை:

அலோபீசியா பார்பே: ஒருவரின் தாடியில் திட்டு திட்டாக முடி உதிர்தல் இருக்கும்.

அலோபீசியா ஓபியாசிஸ்: ஒரு நபரின் உச்சந்தலையில் முடி உதிர்தலின் ஒரு பட்டை அல்லது துண்டு இருக்கும்.

மொத்த வழுக்கை: ஒரு நபரின் உச்சந்தலையில் உள்ள அனைத்து முடிகளையும் இழந்திருக்கும்.

அலோபீசியா யுனிவர்சலிஸ்: ஒருவரின் உச்சந்தலையிலும் உடலின் மற்ற எல்லா இடங்களிலும் உள்ள முடிகள் அனைத்தும் உதிர்ந்திருக்கும். இது அரிதானது.

அலோபேசியா யுனிவர்சாலிஸ்

இதில் உடல் முழுவதும் உள்ள அனைத்து முடிகளும் உதிர்கின்றன.

அலோபீசியா யாருக்கெல்லாம் வரும் வாய்ப்பு அதிகம்

அலோபீசியா முடி உதிர்தல் பொதுவாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் அதிகம் காணப்படும். ஆனால் இது எந்த வயதிலும் வரலாம். அனைத்து தோல் நிறங்கள் மற்றும் பாலினத்தவர்களுக்கும் அலோபீசியா அரேட்டா ஏற்படலாம்.

“அலோபீசியா” என்றால் முடி உதிர்தல் என்று பொருள். “அரேட்டா” என்ற வார்த்தைக்கு ஒட்டுண்ணி என்று பொருள். இந்த நோய் பெரும்பாலும் ஒட்டுண்ணி முடி உதிர்தலை ஏற்படுத்துவதால், இது பொதுவாக அலோபீசியா அரேட்டா என்று அழைக்கப்படுகிறது.

அலோபீசியா ஏற்படுவதற்கான காரணங்கள்

அலோபீசியா நமது பரம்பரையில் யாருக்கெனும் இருந்திருந்தால் நமக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மற்ற காரணங்கள்:

மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் தைராய்டு போன்ற உடல்நலப் பிரச்னைகளும் அலோபீசியா முடி உதிர்வுக்கு பங்களிக்கலாம்.

சிகிச்சை முறைகள்

அலோபீசியாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன, ஆனால் அவற்றின் செயல்திறன் நபருக்கு நபர் மாறுபடும்.

மருத்துவ சிகிச்சைகள், ஆழமான கண்டிஷனிங் மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியமான நிலை ஆகியவை முடி உதிர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

சில சந்தர்ப்பங்களில், முடி மாற்று (hair extensions) போன்றவை பயன்படுத்துவதாலும் ஏற்படலாம்.

இப்பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும். இது பொதுவாக ஒருவர் பயன்படுத்திய சீப்பை இன்னொருவர் பயன்படுத்துவது மற்றும் பொது இடங்களில் கையை வைத்து விட்டு தலையை சொறிவது போன்ற காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகின்றது.

முக்கிய குறிப்புகள்

திடீர் முடி உதிர்வு ஏற்பட்டால், ஆரம்பகால மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான புரதச் சத்து முடி ஆரோக்கியத்திற்கு அவசியம்.

இதற்கான சித்த மருத்துவம்

சிரட்டைத் தைலம், தேங்காய் எண்ணெயில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.

சீமை அகத்தி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும். பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும். தலையில் தேய்க்கும் எண்ணெய் பசையை உண்டு வாழும் ஈஸ்ட் வகைகளில் ஒன்று ‘மாலசீயா’. இது பொடுகு செதில்களுக்கு உள்ளே வளர்ச்சி அடைந்து ஊறல், அதனுடன் பொடித்துகள்கள் முகம், கழுத்துப் பகுதிகளில் உதிர்ந்து காணப்படும்.தலையில் தேய்ப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலம் அல்லது செம்பருத்தி தைலம் பயன்படுத்தலாம்.

தொகுப்பு: தவநிதி