Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீரைகளின் ராணி!

நன்றி குங்குமம் டாக்டர்

கீரைகளின் ராணி என்றால் அது கரிசலாங்கண்ணிதான். இதில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. அதனால்தான் இதனை ‘தங்க மூலிகை’ என்று அழைக்கிறார்கள். கரிசலாங்கண்ணியில் மஞ்சள் மற்றும் வெள்ளை என்று 2 வகைகள் உண்டு. இதில் இந்த மஞ்சள் கரிசலாங் கண்ணியைதான் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்த முடியும். கரிசலாங்கண்ணியில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்.

நரம்புத்தளர்ச்சி

எலுமிச்சை அளவு கீரையை சாந்தாக அரைத்து, அதில் நெல்லிக்கனி அளவினை எடுத்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் கலக்கி, 30 நாட்களும் தினமும் சாப்பிட்டுவர, நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

மாதவிலக்கு வலி

ஒரு பிடி அளவு கீரையை சுத்தம் செய்து, பருப்புடன் வேகவைத்து, கூட்டாகவோ அல்லது கடையல் செய்தோ மதிய உணவின் போது சாப்பிட்டு வர மாதவிலக்கின் ேபாது ஏற்படும் வலி குணமாகும். பற்கள் காரை அகலகரிசலாங்கண்ணிக் கீரையை சுத்தம் செய்து, 14 நாட்கள் நிழலிலும் ஒருநாள் வெயிலிலும் உலர்த்தி, இடித்து, சல்லடையில் சலித்து, அந்த தூளை ஒரு பாட்டலில் இருப்பு வைத்து, தினந்தோறும் அந்த தூளினால் பல் விளக்கி வர பற்களில் படிந்த காரை நீங்கும்.

காதுவலி

எலுமிச்சை அளவு கீரையை நன்கு மசித்து, சுத்தமான துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்து, வலியுள்ள காதில் காலை, மாலை வேளைக்கு 2 சொட்டு விட வலி தீரும்.

சிறுநீரில் ரத்தம்

கைப்பிடி அளவு கீரையை சுத்தமான நீரில் அலசி, அம்மியில் கீரைத்தழைகளை வைத்து அரைத்து, சுத்தமான துணியில் வைத்து வடிகட்டி சாறு எடுத்து, 100 மில்லி அளவு காலை, மாலை மூன்று நாட்கள் பருக சிறுநீரில் ரத்தம் வருவது நிற்கும்.

மூலநோய்

ஒரு கைப்பிடி அளவு கீரையை சுத்தமான நீரில் அலசி, ஒரு சட்டியில் போட்டு 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி அதில் இருந்து வெளியாகும் ஆவியினை ஆசனவாய் பகுதியில் ஏழு நாட்கள் தொடர்ந்து செய்தால் குணமாகும்.

கொழுப்பு குறையகீரையை பருப்புடன் வேகவைத்து கடைந்து, உணவில் 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில், தசைகளில் உள்ள கொழுப்பு குறையும்.

சளி

கரிசலாங்கண்ணித்தழை சூரணம் தயாரித்து, அத்துடன் 10 கிராம்பினை தூளாக்கி சேர்த்து, தினசரி காலை, மாலை வேளைக்கு ஒரு ஸ்பூன் சூரணத்தை தேனில் குழைத்து 3 நாட்கள் சாப்பிட சளி குறையும்.

- பா.பரத், சிதம்பரம்.