Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மல்லிகையின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

மல்லிகைப் பூக்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. சிறுநீரகப் பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, அஜீரணம், புழுக்கள் போன்றவற்றுக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.

மல்லிகைப் பூவை நிழலில் காய வைத்து பொடியாக்கி, வெந்நீரில் கலந்து குடித்தால் சிறுநீரகக் கல் கரைந்துவிடும். நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் மல்லிகைப் பூவை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறவும், கருப்பைப் பிரச்னைகளுக்கு மல்லிகைப் பூ உதவுகிறது. மல்லிகை சீசனான இந்தப் பருவத்தில் மல்லிகையின் மருத்துவ குணங்கள் அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சில மருத்துவ பயன்களாக

*காதில் ஏற்படும் வலி, குத்தல், சீழ் போன்றவற்றிற்கு மல்லிகை இலை எண்ணெய் 2 சொட்டு விட்டால் சரியாகிவிடும்.

*மல்லிகைப்பூ இலையை வாயில் போட்டு மெல்வதால் வாய்ப்புண் நீங்கும்.

*அடிபட்டு வீங்கிய இடத்தில் மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

*மல்லிகை இலையை நெய்யில் வறுத்து, ஒரு துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுத்தால் தொண்டைப்புண், எரிச்சல் உடனடியாக நீங்கும்.

*கால் ஆணியால் அவதிப்படுபவர்கள் மல்லிகை இலையின் சாறெடுத்து காலில் தடவி வந்தால் வலி குறைந்து குணமாகும்.

*தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டி வலியாக இருக்கும்போது, மல்லிகைப் பூவை மார்பில் வைத்து கச்சைக் கட்டிக் கொண்டால், பால் கட்டியது கரையும்.

*மல்லிகைப் பூ தைலம், குளியல் பவுடர் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தந்து வியர்வை வாடையைப் போக்கி, நல்ல நறுமணத்தைத் தரும்.

*மல்லிகை உடலுக்கு குளிர்ச்சி தருமென்பதால், இந்த கோடையில் இதை உபயோகிக்க உடல் சூடு குறைந்து, குளிர்ச்சியைத் தரும்.

*பிசுக்கு, பொடுகு, நுனிபிளவு போன்ற பிரச்னைக்கும் தீர்வு தருகிறது மல்லிகை. மல்லிகை பவுடருடன், இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தூள் கலந்து வாரம் இருமுறை தேய்த்து குளிக்க, மேற்சொன்ன பிரச்னைகளைக் குறைத்து, கூந்தலை மிருதுவாக்கி, மணத்தைக் கொடுக்கும்.

*உலர்ந்த மல்லிகைப் பூ - 100 கிராம், புங்கங்காய் தோல் - 50 கிராம், ஓமம் - 10 கிராம், தவனம், ரோஜா இதழ், மரிக்கொழுந்து ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து பவுடராக்கிக்

கொள்ளவும்.

*இதைக் கொண்டு குளிக்க, குளிர்ச்சியும் வாசனையும் கிடைப்பதோடு தோல் பிரச்னைகள் ஏற்படாதவாறு மேனியை பளபளப்பாக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்