Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லவங்கப்பட்டையின் மகிமைகள்!

நன்றி குங்குமம் தோழி

மூலிகை என்றாலே அதில் நிறைய ஆரோக்கியங்கள் அடங்கி இருக்கும். இதில் லவங்கப்பட்டையில் எண்ணற்ற மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. லவங்கப் பட்டையை பொடி செய்து எப்போதும் வீட்டில் வைத்திருப்பது நல்லது.

*மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் ஒரு டம்ளர் சூடானத் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேனும், சிறிய ஸ்பூன் லவங்கப்பட்டை பொடியும் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். லவங்கப் பட்டை எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதும் மூட்டு வலிக்கு நல்லது.

*தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாமுக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொழுப்பினை குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதைச் சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். வயது ஏற ஏற நம் இதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் லவங்கப் பட்டையும் இதய தசைகளை வலுப்பெறச் செய்கின்றன.

*ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் தேன் மற்றும் லவங்கப்பட்டை பொடியை போட்டு, காலை உணவிற்கு மற்றும் இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிக்கவும். இந்தக் கலவையை குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியானகொழுப்புக் கரைவதுடன், மேலும் கொழுப்புச் சேராமலும் இருக்கும்.

*டீ தண்ணீருடன் 2 மேசைக்கரண்டி தேனும், 3 டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடியும் சேர்த்து சாப்பிட கொழுப்பினால் வரும் தொந்தரவுகள் குறையும்.

*லவங்கப்பட்டை டைப் 2 சர்க்கரை நோயின் அளவைக் குறைக்கிறது. உடலில் இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தியாகத் தூண்டுகிறது.

*தேன் இயற்கையாகவே நம் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. வயதானவர்கள் தேன் மற்றும் லவங்கப்பட்டைப் பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால் உடலாலும், மனதாலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

தொகுப்பு: என்.குப்பம்மாள், கிருஷ்ணகிரி.