Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீரைகளில் இவை ஸ்பெஷல்

நன்றி குங்குமம் தோழி

கீரைகளில் ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு விதமான மருத்துவ பலன்களை கொண்டது. அவைகளின் மருத்துவ குணங்கள் தெரியாததால் பலர் கீரைகளை பயன்படுத்துவது இல்லை.

சக்கரவர்த்திக்கீரை: இரும்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து நிறைந்தது. தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உயிர் அணுக்களை உண்டாக்கி குழந்தைபேற்றை அடையச்செய்யும். தாதுவைப்பெருக்கி உடலுக்கு சக்தியையும், அழகையும் தரும். வயிற்றுப் போக்கு, சிறுநீரக நோய், ரத்த சோகை, மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிற்றுப்புண்ணிற்கு சிறந்தது.

ஆரைக்கீரை: பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூளை கோளாறு மற்றும் பால் வினை நோய்களுக்கு கை கண்ட மருந்து. வாய்க்கால் ஓரங்களில் வளரும் கொடி வகை. துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

சுங்கான்கீரை: ஆஸ்துமா, மூச்சுத் திணறலை கட்டுப்படுத்தும். இதில் ஆக்ஸலேட்கள் அதிகளவில் இருப்பதால் பூச்சிக்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. புளி சேர்க்காமல் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட குடல்புண் குணமாகும்.

சதக்குப்பைக்கீரை: வாய் நாற்றம் அகலும். கர்ப்பப்பை கோளாறு உள்ளவர்கள் கீரையுடன் சீரகம், மிளகு மற்றும் பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட சரியாகும்.சிறுகீரை: தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் வலுவடையும். பித்தம், வாத தோஷங்கள் குறையும். சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பலப்படுத்தும். மது குடிப்பதால் உண்டாகும் குடல் புண்களை ஆற்றும். உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும்.

தவசிக்கீரை: அனைத்து வைட்டமின்களை கொண்டது. உடற்சோர்வு, சர்க்கரை நோயால் ஏற்படும் உடல் பலகீனம் போன்ற குறைபாடுகளை தீர்க்க வாரம் ஒருமுறை தவசிக்கீரை சாப்பிட சரியாகும்.

சண்டி கீரை : மூட்டு வலி, முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகளை போக்குவதுடன், சளி, சுவாசக் கோளாறு மற்றும் நெஞ்சு வலி போன்றவற்றை போக்கும். உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்கது. பாசிப்பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட வாதம் குணமாகும்.

வெந்தயக்கீரை: தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்களும் நிறைந்த இக்கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கும். சொறி சிரங்கு நீக்கும், நீரிழிவு நோய் மற்றும் காசநோய் குணமாக்கும், பார்வை குறைபாடுகளை சரி செய்ய உதவும். படுக்கைக்குச் செல்லும் முன் வெந்தயக்கீரையை நன்கு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர கரும்புள்ளிகள், முக வறட்சி மறையும்.

முளைக்கீரை: இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்ட இக்கீரைபை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியை தருகிறது. நரம்பு தளர்ச்சிக்கு சிறந்தது.

பருப்புக்கீரை: கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய கீரை. ஒமேகா 3, கால்சியம், வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் நிறைந்தது.

தொகுப்பு: கோவீ. ராஜேந்திரன், மதுரை.