Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் மூலம் எளிய தீர்வு!

நன்றி குங்குமம் தோழி

பைல்ஸ், இது ஒரு வகையான மூல நோய். ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலில் உள்ள நரம்புகள் வீங்கி விரிவடையும் நிலையை தான் பைல்ஸ் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மலக்குடலின் கீழ்ப் பகுதி அல்லது ஆசனவாயின் தோல் பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. நாள்பட்ட மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அதிக எடை தூக்குதல், மலம் கழிக்கும்போது ஏற்படும் சிரமம் போன்றவற்றால் இந்தப் பிரச்னை ஏற்படும்.

ஆசனவாயில் வீக்கம், கட்டிகள், அசெளகரியம், மலத்துடன் ரத்தம் வெளியேறுவது போன்றவை இதற்கான அறிகுறிகள். இந்த நோய்க்கு சிறந்த தீர்வு பைல்ஸ் ஹெமராய்ட் (Haemorrhoids) லேசர் சிகிச்சை. இந்த சிகிச்சை சென்னையில் உள்ள ஹண்டே மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் மட்டும் லேசர் கருவியால் அகற்றப்படும்.

பௌத்திரம், ஆசனவாயின் உட்புறம் மற்றும் சுற்றியுள்ள வெளிப்புறத் தோலுக்கு இடையில் உருவாகும் புண். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப அறுவை சிகிச்சை அல்லது Fistulous Tract லேசர் சிகிச்சையினை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள். பிளவு, ஆசனவாயின் நடுப்பகுதி அல்லது திறப்பு பகுதியில் உள்ள மெல்லிய திசுக்கள் கிழிவதால் ஏற்படும். நாள்பட்ட மலச்சிக்கல், உணவில் போதுமான நார்சத்து இல்லாத காரணத்தால் ஏற்படும். Sphincterotomy லேசர் சிகிச்சை மூலம் எந்தவித வடு இல்லாமல் சிகிச்சை அளிக்க முடியும்.

வெரிகோஸ் வெயின், நரம்புகள் சுருட்டிக்கொள்ளும் பிரச்னை. பெரும்பாலும் கால் மூட்டுக்கு கீழே உள்ள பகுதியில்தான் அதிகம் பாதிப்பு ஏற்படும். நரம்பு சுவர்களின் பலவீனம் மற்றும் ரத்தம் நரம்பில் சரியாக செல்ல முடியாத காரணத்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதற்கு எண்டோவெனஸ் லேசர் சிகிச்சை சிறந்தது. உடலில் அதிகப்படியான கொழுப்பை லேசரின் மூலம் அகற்றும் செயல்முறைதான் லேசர் லைபோசக்‌ஷன். அதி நவீன ட்யூமசென்ட் (Tumescent), லைபோசக்சன் சிகிச்சை அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்றது. வயிறு, இடுப்பு, தொடை, கை போன்ற பகுதியில் உள்ள கொழுப்பினை இதன் மூலம் குறைக்கலாம்.

கைனகோமாஸ்டியா, ஆண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ் டோஸ்டிரோன் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக அவர்களின் மார்பகங்கள் பெரிதாக காணப்படும். இதனை லேசர் லைபோசக்சன் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். வயது முதிர்ச்சி மற்றும் தசை அழுத்தத்தின் காரணமாக பெண்ணுறுப்பின் தசைகள் பலவீனமடையும். விளைவு பாலியல் சிரமங்கள், அரிப்பு, எரிச்சல், மாதவிடாய் பிரச்னை, தசை தளர்ச்சி மற்றும் சிறுநீர் பிரச்னைகள் ஏற்படும். பிறப்புறுப்பில் செய்யப்படும் இந்த லேசர் சிகிச்சை மூலம் தோலின் மேல்பகுதி, இணைப்பு திசுக்கள் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. எளிதான சிகிச்சை முறை என்பதால், பெண்கள் உடல் மற்றும் மனதளவில் நல்ல மாற்றத்தினை உணர்வார்கள்.

தொகுப்பு: மா.வி