Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி- நடப்பதை இயல்பாக்கிக் கொள்ளுங்கள்!

நன்றி குங்குமம் தோழி

பொதுவாகவே நாம் நடந்து செல்வதை மறந்து விட்டோம். வீட்டின் வாசலில் ஆட்டோவில் ஏறுகிறோம். அலுவலகத்தில் லிப்ட் பயன்படுத்துகிறோம். அலுவலக நேரம் முடிந்ததும், அதே முறையில் வீடு திரும்புகிறோம். மிகக் குறைவான நடை நமது உடல் நலத்தினை பாதித்து பற்பல நோய்களுக்கு வழிவகுக்கும். அந்தக் காலத்தில் நடைப்பயணம் அதிகம். உடல் ஆரோக்கியமாக இருந்தது.

நடராஜா வண்டி எனச் ெசால்லக்கூடியது நமது கால்கள் சரியாக இருந்தால் மட்டுமே நாம் நடமாட முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்வோம்.கால்களில் உள்ள விரல்கள், விரல் இடுக்குகள் அனைத்தையும் உற்றுப் பாருங்கள். சிலரின் பாதங்களில் வெடிப்புகளோடு இருப்பார்கள். அதனால் நடப்பது, நிற்பது அனைத்தும் சிரமம். சிலருக்கு கால் ஆணி இருக்கும். அவர்கள் வலியினால் அவதிப்படுவார்கள். இது போன்ற நிலமைக்கு முன் தயவு செய்து கால்களை பாதுகாக்க சில எளிய வைத்திய முறைகளை கையாளுங்கள்.

*இரவு தூங்கும் முன் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு கலந்து, அவற்றில் கால்களை கால் மணி நேரம் வைத்திருங்கள். பின்னர் மெதுவாக மசாஜ் செய்து தேய்த்து விடுங்கள். இது போன்று செய்து வந்தால் பித்த வெடிப்பு, கால் ஆணி போன்றவை குணமடையும்.

*தினமும் இருபது அல்லது முப்பது நிமிடங்கள் நடங்கள். வேக வேகமாக ஓடுவதோ, மூச்சிரைக்க நடப்பதோ தேவையில்லை. உங்கள் உடம்பு சொல்லும் அளவுக்கு நடந்தால் போதும். நடப்பது நல்லது. அதிலும் செருப்பில்லாமல் மண் தரையில், புல் வெளியில், கூழாங்கல்லில் நடப்பது இன்னும் நல்லது.நடப்பதை இயல்பாக்கிக் கொள்ளுங்கள். உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்வோம்.

தொகுப்பு: ஆர்.யமுனா, காஞ்சிபுரம்.