Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி வேப்பம் பூ

நன்றி குங்குமம் தோழி

வருடத்தில் பங்குனி மாதம் மட்டுமே அதிகளவில் பூக்கக்கூடிய பூதான் வேப்பம் பூ. அந்தக் காலத்தில் பூக்கும் இந்தப் பூவினை சேகரித்து வைத்து வருடம் முழுதும் பயன்படுத்தலாம். மேலும் இதில் பல ஆரோக்கியங்கள் நிறைந்துள்ளன. வேப்பம்பூ, ஒரிஜினல் மலைத்தேன், முருங்கைக்கீரை, நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பதுதான் இதன் சிறப்பு. அவற்றை தெரிந்து கொள்ளலாம்.

*பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காய வைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம்.

*வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூக்கு உண்டு. நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும்.

*சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள்... அவ்வளவாக பார்வையை கவர்வதில்லை. ஆனால் அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம் மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே... அது போல ஒரு வாசம். அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.

* கேன்சர் கிருமிக்கு எதிரி, குளிர்ச்சி தருவது, குடற் புண்ணை சரி செய்வது, மன நிம்மதி தருகிறது, பல் சுத்தம் என்பதெல்லாம் தாண்டி நீரிழிவுக்கு எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி. நீரிழிவின் பேரழிவு வேப்பம்பூ.

* காயவைத்த வேப்பம்பூவினை அப்படியே சாப்பிடலாம். வாரத்திற்கு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

* பச்சடி, ரசம், அவியல் போன்றவற்றிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

*நம்ம பெரியவங்க இதை நாம சாப்பிட வேண்டும்... நல்லா ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு சாப்பிட வைத்திருக்கிறார்கள்.

*மருத்துவ செலவை எப்படியாவது குறைக்க ஆசைப்படுகிறவர்கள், விரும்புகிறவர்கள் எல்லாம் பங்குனியில் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்தி பயன்படுத்தவும்.

தொகுப்பு: சுந்தரி காந்தி, சென்னை.