Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசகர் பகுதி - வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் தோழி

* வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

* சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால், சூட்டினால் உண்டாகும் உடல் எரிச்சல் குறையும்.

* சீதபேதி, வயிறு இரைச்சல், வயிற்றுப் புண், வயிற்றுப் பொருமல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் குணமாகும்.

* அஜீரணக் கோளாறினை அகற்றும்.

* வெந்தயத்தையும், சீரகத்தையும் சம அளவு எடுத்து காயவைத்து தூளாக்கி, அதை காலை, மாலை அரை ஸ்பூன் இருவேளை அருந்தி வந்தால் சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். சர்க்கரை நோய் இல்லாதவர்களும் அருந்தி வரலாம். எந்த எதிர் வினையும் ஏற்படுத்தாது.

* உணவுப் பொருட்களில் வெந்தயம் சேர்த்து சமைப்பது அருமருந்து.

* உடலில் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கிறது.

தொகுப்பு: கே.பிரபாவதி, கன்னியாகுமரி.