நன்றி குங்குமம் தோழி
பலர் தினமும் காலையில் மூன்று, நான்கு பேரீச்சம் பழம் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஆனால், அது உடலுக்கு எவ்வாறு உதவுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
* மலச்சிக்கல் அல்லது வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் பேரீச்சம் பழத்தை தவறாமல் சாப்பிட வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, பேரீச்சம் பழம் இத்தகைய வயிற்று நோய்களுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
* பேரீச்சம் பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. அவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டவுடன் ஆற்றலை அதிகரிக்கின்றன. சோர்வாக உணர்ந்தால், ஒன்றிரண்டு பேரீச்சம் பழம் சாப்பிட மறக்காதீர்கள்!
* பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், பேரீச்சம் பழத்தை தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து குறைகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்ற அனைத்து இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
* பல்வேறு காரணங்களால் உடல் எடை குறைய ஆரம்பித்தவர்கள் பேரீச்சம் பழம் சாப்பிடலாம். இந்தப் பழத்தில் உள்ள கலோரிகள், உடல் செயலிழப்பைத் தடுத்து எடை அதிகரிப்பதில் சிறப்புப் பங்கு வகிக்கிறது.
* பேரீச்சம் பழத்தில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் ஒட்டுமொத்த மூளை சக்தியை அதிகரிப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது.
தொகுப்பு: பா.பரத், சிதம்பரம்.