Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் பூசணி விதைகள்!

நன்றி குங்குமம் தோழி

பூசணிக்காயை சமையலுக்கு பயன்படுத்திவிட்டு அதன் விதைகளை தூக்கி எறிந்து விடுவோம். பூசணி விதைகளில் நம் உடலுக்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துகள் உள்ளது. பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் 10 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

*நல்ல தூக்கத்தை தரும்: இன்றைய காலத்தில் தூக்கம் வராமல் பலரும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் இயற்கையாகவே ட்ரைப்டோபான் என்ற அமினோ ஆசிட் உள்ளது. மெலடோனின் மற்றும் செரடோனின் சேர்க்கைக்கு சிறந்தது என்பதால், நல்ல தூக்கம் கிடைக்கும்.

*நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்: இதிலுள்ள துத்தநாகம் நோய் எதிர்ப்பு செல்கள் முறையாக செயல்பட உதவுகிறது.

* இதய நலன்: பூசணி விதையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது.

* அதிக சத்துகள்: மெக்னீசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, காப்பர் போன்ற ஊட்டச்சத்துகளில் ஆரோக்கியத்தை தரும் கொழுப்பும் புரதமும் உள்ளது.

* மனநலனை மேம்படுத்தும்: இதிலுள்ள மெக்னீசியம் மனநிலையை மகிழ்ச்சியாக்க உதவுவதோடு மன அழுத்த அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.

* எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது: துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை எலும்புகளை வலுப்படுத்த உதவுவதோடு எலும்புப்புரை நோய் ஏற்படாமலும் தடுக்கிறது.

* செரிமானத்தை மேம்படுத்துகிறது: பூசணி விதைகளில் உள்ள நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. மேலும், பூசணி விதையில் உள்ள நார்ச்சத்து, நமக்கு வயிறு நிறைந்த உணர்வை தருகிறது.

* ஆன்டி ஆக்ஸிடென்ட்: வைட்டமின்-இ, கரோடீனாய்டு போன்ற ஆன்டி ஆக்ஸிடென்டுகள் பூசணி விதையில் உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதோடு ஃப்ரீ ரேடிக்கல்ஸுக்கு எதிராக உடலை போராட வைக்கிறது.

* ப்ரோஸ்டேட் ஆரோக்கியம்: ப்ரோஸ்டேட் சுரப்பி வீக்கத்தை (BPH) குறைக்க உதவுகிறது.

* சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது: பூசணி விதையில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. டயாப்டீஸ் நோயாளிகள் பூசணி விதைகளை

தங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.