Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்க!

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டார்கள். அவர்களது உடல் நலம், மனநலம் காக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு அவசியம். மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, சில எளிய உணவுகளை ரெகுலராக கொடுத்து வர அவர்களின் படிப்பு, வளர்ச்சி, செயல்திறன் மேம்படும்.

கவனத்தை ஒருமுகப்படுத்த: முழுப்பயறு வகைகள், கைகுத்தல் அரிசி, கோதுமை, ராகி, சோளம், பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவை. வெஜிடபிள் சாண்ட்விச், ஃப்ரெஷ்ஷான பழங்கள் போன்றவையும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.

மகிழ்ச்சியான மனநிலைக்கு: பழங்கள், காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பொட்டாசியம், வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. மூளையிலுள்ள செல்கள் பார்க்காதவாறு இந்த ஊட்டச்சத்துக்கள்தான் பாதுகாக்கின்றன. வைட்டமின்களையும், தாதுக்களையும் அவை வாரி வழங்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலத்துக்கு முட்டை, பாதாம், வால்நட், போன்ற பருப்புகள். மீன், எள், பரங்கி விதை, முழு கோதுமை போன்ற உணவுகள்.

சிந்திக்கும் சக்தி அதிகரிக்க: தானியங்கள், பருப்புகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், ஈஸ்ட், கீரைகள்.

தண்ணீரின் தேவை: தண்ணீர் முக்கியமானது அவர்களுக்கு, தண்ணீர் போதுமான அளவு அருந்துகிறார்களா என கவனிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு அதிகமான சர்க்கரை, பேக்கிங் உணவுகளை தவிர்க்க வேண்டும். தூக்கம் வரவழைக்கும், மூளையை உடலை மந்தமாக்கும். இவற்றை தவிர்த்து வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், தேன் போன்றவற்றை கொடுத்து பழக்குங்கள். குழந்தைகளுக்கு வைட்டமின் சி யை அதிகம் சேர்க்க வேண்டும். வாழைப்பழம் வைட்டமின் பி6 நிறைந்திருப்பதால், படிக்கும் ஆர்வத்தை தூண்டும். உடலை மூளையை சுறுசுறுப்பாக்கும்.உலர் பழங்கள், தானியங்களில் உள்ள ஃபேட்டி ஆசிட்ஸ், புரதம் போன்றவை மூளைச் செல்களை பாதுகாத்து, ஊட்டத்தை கொடுக்கும்.

நல்ல தூக்கம், உடற்பயிற்சி அல்லது தியானப் பயிற்சியை கற்றுக் கொடுக்க மனம் ஒரு முகப்படுவதுடன், அவர்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பதப்படுத்தப்பட்ட, பின்ஃபுட், திடீர் உணவுகள், நொறுக்குத்தீனி போன்றவற்றை கொடுக்க உடல் பழக்கிட அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.நான்வெஜ் உணவுகளை நன்கு சமைத்து வீட்டில் செய்து கொடுக்க அதன் நன்மைகள் முழுவதும் கிடைக்கும்.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்