Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ப்ரீத்தி முகுந்த் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஓம் பீம் புஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் ப்ரீத்தி முகுந்தன். தங்க தமிழச்சியான இவர், கல்லூரி பருவத்திலேயே மாடலிங் துறையில் இறங்கி நூற்றுக்கணக்கான விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழில் `ஸ்டார்’ படத்தின் மூலம் களமிறங்கினார். பின்னர், தெலுங்கில் கண்ணப்பா திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து, தற்போது தமிழில் அதர்வாவுடன் ‘இதயம் முரளி’, ஹரிஷ் கல்யாணுடன் பெயரிடப்படாத படம், அசோக் செல்வனுடன் புதிய படம், மலையாளத்தில் ஹிருது ஹாரூனுடன் ‘மைனே பியார் கியா’, நிவின் பாலியுடன் ‘சர்வம் மாயா’ என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ப்ரீத்தி மியூசிக் ஆல்பங்கள் பலவற்றில் நடித்துள்ளார். அதில் சாய் அபயங்கருடன் ட்ரெண்டிங்கான ‘ஆச கூட...’ பாடல் 300 மில்லியன் வியூக்களை நெருங்கி, மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக தமிழில் உருவாகி வருகிறார். ப்ரீத்தி முகுந்தன் தனது ஃபிட்னெஸ் குறித்து பகிர்ந்து கொண்டவை.

வொர்க் அவுட்ஸ்

நான் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர், உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் உடையவள். அந்தவகையில், தினமும் காலை யோகா பயிற்சியில் தொடங்கி பின்னர், ஜிம்மிற்கு சென்று குறைந்தபட்சம் 2 மணி நேரம் உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறேன் அதில் நடைபயிற்சி அரைமணி நேரம் செய்வேன். அதன்பின்னர், ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் அரை மணி நேரம்.

பின்னர், ஸ்டேமினாவை அதிகரிக்கும் வகையில் பைலேட்ஸ் பயிற்சிகள் செய்வேன். பின்னர், புஷ்- அப், புல் - அப், க்ரஞ்சஸ் மற்றும் ஸ்குவாட் பயிற்சிகளும் செய்வேன். இவையெல்லாம் எனது தினசரி உடற்பயிற்சிகளாகும். பின்னர், பரதநாட்டியம் முறைப்படி பயின்றவள் என்பதால், தினசரி ஒரு மணி நேரம் நடனப் பயிற்சிகளை செய்வேன். இவைதான் எனது வொர்க்கவுட் ரகசியங்கள்.

டயட்: டயட் எல்லாம் பெரிதாக கடைபிடிப்பதில்லை. ஏனென்றால், நான் ஒரு ஃபுட்டி. நல்ல ருசியான உணவுகளை தேடித் தேடி உண்பவள். உதாரணமாக, என் ப்ரெண்ட்ஸ் யாரும் இந்த ஹோட்டலில் உணவு நன்றாக இருந்தது என்று சொல்லிவிட்டால் போதும், உடனே அங்கு சென்று ருசி பார்த்துவிடுவேன். அந்த வகையில், பிரியாணி, பீட்சா, பாஸ்தா, பர்கர், மோமோஸ், சமோசா, கேக் மற்றும் வடை பாவ், பாவ் பாஜி, எனக்கு மிகவும் பிடித்தமானது.

அனைத்து வகையான இந்திய உணவுகளையும் சாப்பிட விரும்புகிறேன். அதுபோன்று, பெங்காலி உணவுகள் மீதும் எனக்கு விருப்பம் அதிகம். அதில், மட்டன் கோஷா மிகவும் பிடித்தமானது. இது தவிர லக்னோ உணவுகள் மற்றும் தென்னிந்திய உணவு வகைகளும் பிடிக்கும். மேலும், இனிப்பு வகைகளில் குலாப் ஜாமூன், ரசகுல்லா, ஐஸ்கிரீம், டார்க் சாக்லேட்டுகள் போன்றவற்றையும் அதிகம் விரும்பி சாப்பிடுவேன். பானங்களில் காபி, பழச்சாறுகள் மற்றும் மோஜிடோ மிகவும் பிடிக்கும். என்ன வகையான உணவு சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் சரி, மறுநாள் அதற்கு தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டுவிடுவேன். இதனால்தான் என் உடலை சீராக வைத்திருக்க முடிகிறது.

பியூட்டி

உண்மை சொல்ல வேண்டும் என்றால் என்னுடைய பியூட்டி சிக்ரெட்ஸ் என்று எதுவுமில்லை. என்னுடைய ஜீன்னிலிரு்நது ஹெல்தியான ஸ்கின் வந்துள்ளதாக நினைக்கிறேன். பொதுவாக எனக்கு ஹெவி மேக்கப் பிடிக்காது. அதேசமயம், படத்திற்கு, அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அந்த மேக்கப்பை போட்டு கொள்கிறேன். சூட்டிங் இல்லாத நேரங்களில் லைட் மேக்கப்தான் இட்டுக் கொள்வேன்.

பொதுவாக, பெர்ஃப்யூம்ஸ் மீது மிகுந்த பிரியம் உண்டு. வீட்டில் உயர் பிராண்டட் வாசனை திரவியங்களின் பெரிய தொகுப்பே வைத்திருக்கிறேன். இதைதவிர, எனக்கு ஆன்ட்டிக் நகைகள் அணிய பிடிக்கும். அதுபோன்று விதவிதமான காலணிகள் சேகரிப்பதும் விருப்பமானது. அதுபோன்று நெயில் ஆர்ட் செய்வதில் மிகுந்த ஆர்வம் உண்டு. இவைகள்தான் எனது பியூட்டி சிக்ரெட்ஸ்.

தொகுப்பு: ஸ்ரீ