Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

படிக்கட்டுகளைப் பயன்படுத்துங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தினமும் ஜாகிங், வாக்கிங், சைக்கிளிங் பயிற்சி செய்வதனால் கிடைக்கும் நன்மைகளைப் போலவே, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் பல நன்மைகள் கிடைப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது என்று தெரிவிக்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

இதனால், படிக்கட்டுகளை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் போதெல் லாம் லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு படிக்கட்டுகளை பயன்படுத் துங்கள். ஏனென்றால், தினசரி படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது இதயத்திற்கு நல்ல ரத்தஓட்டத்தை கொடுத்து, சீராக வைக்கிறது. இதன்மூலம் மாரடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுகிறது. எனவே, வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ பல முறை படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டும் என்ற நிலைமை இருந்தால் கவலை கொள்ளாதீர்கள்.

எடை குறைய: உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள், படிக்கட்டுகளில் நடைப்பயிற்சி தொடங்கினால் போதும். அவ்வளவு பிரதிபலன் கிடைக்கும். காரணம் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால் உடலின் கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுகின்றன. வேகமாக உடல் எடையை குறைக்க தினமும் 10 முதல் 12 முறை படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது நல்லது.

தசைகளுக்கு வலு: நடைபயிற்சி, ஜாகிங் செய்வதன் மூலம் தசைகள் பலப்படுத்தப்படுகின்றன. அதேப்போன்று படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போதும், கால்கள் மிகவும் அழுத்தமாக உணர்கிறது. நடைப்பயிற்சியில் கிடைக்கும் பெரும் பலன்களை படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதன் மூலமும் பெறலாம். குறிப்பாக கால்களில் உள்ள பெரும்பான்மை கொழுப்புகள் படிக்கட்டில் ஏறி இறங்குவதால் குறைக்கப்படுகிறது.

மன ஆரோக்கியம் மேம்படும்: மன அழுத்தத்தில் இருப்பதாக உணரும்போதெல்லாம், படிக்கட்டுகளில் அரைமணி நேரம் ஏறி இறங்கத் தொடங்குங்கள். இது மன திடத்தை அதிகரிக்கும் ஆற்றலை வழங்கும். படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது உடல் ரத்தத்தை வேகமாக உந்துகிறது. மேலும் இது மனதை அழுத்தமில்லாமல் பாதுகாக்க உதவுகிறது.

சகிப்புத்தன்மை: படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது சகிப்புத்தன்மை வலுவாக இருக்கும். ஆரம்பத்தில், 3 முதல் 4 முறை படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், படிப்படியாக சகிப்புத்தன்மை அதிகரிக்கும். மேலும், படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது, முதுகு மற்றும் கழுத்து நேராக்கப்படுகிறது. எனவே, படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது, உடலை வளைத்து நடக்கக் கூடாது. இதனால் முதுகு மற்றும் கழுத்து இரண்டிலும் வலி ஏற்படும்.

தொகுப்பு: தவநிதி