Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்களின் கருவளையம் போக்க...

நன்றி குங்குமம் டாக்டர்

கண்களின் கருவளையம் என்பது பலருக்கு ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும் நிலையில் இதற்கு ஏராளமான மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் அது நிரந்தரமாக தீர்வு கொடுக்கவில்லை என்ற நிலையில் கருவளையம் ஏற்பட என்ன காரணம்? அதை போக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

கருவளையம் ஏற்பட சில காரணங்கள் இதோ:

*போதுமான தூக்கமின்மை

*தவறான உணவுப் பழக்கம்

*இரவில் தாமதமாக திரைகளைப் பார்ப்பது

*சோர்வு

*மன அழுத்தம்

*உலர் கண்கள்

*கண் ஒவ்வாமை

*நீரிழப்பு.

உடலில் நீர் பற்றாக்குறை

கண்களில் ஏற்படும் கருவளையங்களை நீக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகியவற்றை சம அளவு எடுத்து பருத்திப் பஞ்சின் உதவியுடன் கருவளையங்கள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை கழுவினால் விரைவில் கருவளையம் மறைந்துவிடும். அதேபோல் தேன், பால் மற்றும் எலுமிச்சைச்சாறு கரைசலை கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களில் தடவினாலும் விரைவில் கருவளையம் நீங்கிவிடும்.

குளிர்ந்த பால்

பாலில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தின் கருமை நிறத்தை நீக்கி, கண்ணுக்குக் கீழ் உள்ள கருவளையங்களையும் நீக்குகிறது. மேலும், இதில் உள்ள பொட்டாசியம் சத்துகள் சருமத்தை மாய்ஸ்சரைசராக வைத்திருக்க உதவுகிறது. இதற்கு பாலை காட்டன் பஞ்சு ஒன்றில் நனைத்து, அதனை கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் அப்ளை செய்ய வேண்டும். மேலும், 15 நிமிடங்கள் கழித்து இவற்றைக் குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.

உருளைக்கிழங்கு

உணவுப் பொருளான உருளைக்கிழங்கைப் பயன்படுத்தி, முகத்தில் உள்ள கருவளையத்தை எளிமையாக நீக்கலாம். உருளைக்கிழங்கை அரைத்து, அதிலிருந்து கிடைக்கும் சாற்றை காட்டன் துணியில் நனைத்து அதனை கண்ணைச் சுற்றித் தடவ வேண்டும். இதனை 10 நிமிடம் வரை ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ கண்களைச் சுற்றியுள்ள

கருவளையங்களை எளிதில் நீக்கலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி, ஏ, ஈ போன்றவை உள்ளன. இவை சரும பராமரிப்பிலும், முடி பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரவு தூங்கும் முன் பாதாம் எண்ணெயுடன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முகத்தில் கருவளையம் உள்ள இடத்தில் தடவலாம். 10 நிமிடம் கழித்து இவற்றைத் தண்ணீரைக் கொண்டு கழுவ கருவளையம் நீங்கி விடும்.

தொகுப்பு: ஸ்ரீ