Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!

நன்றி குங்குமம் டாக்டர்

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. மேலும், ஆயில் புல்லிங் செய்வதன் மூலம், பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மூட்டு வலி, முழங்கால் வலி, மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் சரியாகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு எந்தவித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. ஏதாவது நோய்க்கான மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் செய்யலாம். ஆயில் புல்லிங் செய்யும் போது, ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும், பயப்பட வேண்டியதில்லை ஒன்றும் ஆகாது.

கறைகள் படிந்த பற்கள் உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்கள் வெண்மையாக மாறிவிடும். மேலும், ஈறுகளும் ஆரோக்கியமானதாகவும் காணப்படும்..

தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் சரியாகும்.ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் முறை:

காலை எழுந்ததும், பல் தேய்த்தப்பிறகு, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர் குடிக்க வேண்டும். பிறகு, ஆயில் புல்லிங் செய்வது நல்லது. அதற்கு சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி அதை வாய் முழுவதும் படும்படியாக 10 நிமிடம் கொப்பளித்து பின்னர் உமிழ்ந்துவிட வேண்டும். இதுவே, ஆயில் புல்லிங் செய்யும்முறை.

தொகுப்பு: தவநிதி