நன்றி குங்குமம் தோழி
* பொதுவாகவே வெட்டிவேர் இருக்கும் இடத்தில் காற்று மாசுபாடானது கட்டுக்குள் இருக்கும். காற்றில் இருக்கும் மாசுகளை வெட்டிவேரானது நீக்கும் தன்மை பெற்றது.
* சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் வெட்டிவேர் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
* வெட்டிவேரின் மூலம் உடல் சோர்வு நீங்கி உடலில் உள்ள அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. பெண்கள் உடலில் இருக்கக்கூடிய சுரப்பிகள் முறையாக வேலை செய்வதற்கு பயன்
படுகிறது.
* தோலில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் தோலானது பளபளப்பாக இருக்காது. அப்படி உள்ள இடங்களிலும் செல்களைப் புதுப்பித்து தோலை பளபளப்பாக ஆக்கிவிடும்.
*வெட்டிவேரானது உடல் இயக்கத்திற்கு தேவையான எரிசக்தியை அளிப்பதால் சாப்பிடும் உணவை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
* மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட விஷத்தின் தன்மையை முறிக்கிற சக்தி வெட்டிவேருக்கு உண்டு.
* பல நாடுகளில் இந்த வெட்டிவேரை தியானம் செய்வதற்கு பயன்படுத்துகிறார்கள். காரணம், சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துகிறது.
*வெட்டிவேரானது சாதாரண புல்லாக இருந்தாலும் பலதரப்பட்ட பலன்களை உடையதாக உள்ளது.
தொகுப்பு: டி.லதா, நீலகிரி.