Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குப்பைமேனி இலையின் மருத்துவ குணம்!

நன்றி குங்குமம் தோழி

* குப்பைமேனி சாற்றை நெற்றியில் தடவ தலைவலி நீங்கும்.

* குப்பைமேனி சாற்றை குடித்தால் சளி, இருமல் நீங்கும்.

* குப்பைமேனி இலையை அரைத்து காதோரம் தடவினால் காதுவலி நீங்கும்.

* நாள்பட்ட புண்கள், நஞ்சுக்கடி ஆகியவைகளுக்கு குப்பைமேனி இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்து தடவினால் குணமாகும்.

* படுக்கை புண்களுக்கு குப்பைமேனி இலையை பொடி செய்து புண்கள் மீது வைத்துக் கட்டினால் புண்கள் குணமாகும்.

* குப்பைமேனி இலையை பூனை தன் நாவினால் நக்கிக் கொடுத்தால் பூனைக்கு ஏற்படும் மந்தம், அஜீரணம், உடல்வலி மற்றும் கண் நோய் குணமாகும்.

* குப்பைமேனி இலையை அரைத்து சுண்ணாம்பு சேர்த்து தடவினால் சீழ், வீக்கம் மற்றும் கட்டிகள் குணமாகும்.

* குப்பைமேனி இலை சாற்றை சுண்டக் காய்ச்சி மெழுகு பதத்தில் குழந்தைகளுக்கு கொடுக்க இருமல் நீங்கும்.

* குப்பைமேனி இலைச் சாறு பல் நோய், தீக்காயம், வயிற்று வலி, நமச்சல், குத்தல், இரைப்பு வலி நோய், மூக்கில் நீர் வடிதல் ஆகியவற்றை குணமாக்கும்.

* குப்பைமேனி சாற்றுடன் நல்லெண்ணெய் கலந்து சுண்டக் காய்ச்சி தேய்த்தால் உடல்வலி மற்றும் மூட்டு வலி குணமாகும்.

* குப்பைமேனி சாறுடன் சுக்கை இழைத்து நெற்றியில் பற்றுப் போட்டு, சாம்பிராணி புகை நெருப்பு சூடு காட்டினால், தீராத தலைவலியும் உடனே தீரும்.

தொகுப்பு: இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி.