Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிக்கரி எனும் மாமருந்து!

நன்றி குங்குமம் டாக்டர்

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு ஒரு கப் காபி சாப்பிட்டால் தான் சிலருக்கு வேலையே ஓடும். காபி குடிக்காவிட்டால் அன்றைய நாள் முழுவதும் டென்ஷனோடு காட்சியளிப்பதோடு, எதையோ இழந்ததைப் போலவே தவித்துப் போய்விடுவார்கள். காபி குடித்து பழகிவிட்டால் அது ஒரு போதை போல அமைந்துவிடும். அதுபோன்று, காபிக்கு பழகியவர்கள் தேநீர், பூஸ்ட், ஹார்லிக்ஸ் என்று எதையும் விரும்பமாட்டார்கள்.

காபி குடித்தால் போதும் சுறுசுறுப்பாய், பணியாற்றத் தொடங்கிவிடுவார்கள். காபி வகைகளில் பில்டர் காபிதான் மிகவும் சுவையாக இருக்கும். காபித் தூளில் சிக்கரியைக் கலந்து ஃபில்டரில் இறக்கிக் காப்பியைச் சாப்பிடுவது ஒரு ரகம் என்றால் சிக்கரியைச் சேர்க்காமல் பில்டர் காபி சாப்பிடுபவர்கள் இன்னொரு ரகம்.

சிக்கரி காப்பிக்குத் தனிச்சுவையூட்டுவதோடு உடம்புக்கு நல்ல மருந்தாகவும் வேலை செய்கிறது. சிக்கரித்தூள் உடலுக்கு ஆரோக்கியமானது. சிக்கரியினால்தான் காபியே நறுமணமுடையதாக அமைகிறது. சிக்கரி சுவையானது ருசியானதும் கூட. சிக்கரி காபியை குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாம். சிக்கரி ஆயுளை அதிகரிக்கும். இருதயம், ரத்தக் குழாய்கள் , நரம்புகள், குடல், இரைப்பை, கல்லீரல் போன்ற உறுப்புகள் நன்றாக வேலை செய்ய சிக்கரி பெரிதும் உதவுகிறது.

சர்க்கரை வியாதிக்காரர்கள் சர்க்கரை இல்லாத சிக்கரியைச் சாப்பிடலாம். அவர்களின் தாகம் தணியும். இரவு படுக்கைக்குப் போகும் முன்பு சிக்கரியைக் கொஞ்சமாக குடிக்கலாம். சிக்கரி ஒரு அற்புதமான மருந்து என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சிக்கரியைச் சாப்பிட்டால் கல்லீரல் நன்றாக வேலை செய்யும்.

சர்க்கரை வியாதிக்காரர்கள் பயமில்லாமல் சிக்கரி கஷாயத்தைக் குடிக்கலாம். சிக்கரி ரத்தத்தைச் சுத்தமாக்கும். சிக்கரி குடிப்பதால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். சரும நோய்கள் அனைத்தும் குணமாகும். வாத நோய், தலைவலி, தொண்டை எரிச்சல் ஆகியவை குணமாகும். பெண்களுக்கு மாத விலக்கு பிரச்னைகள் இருந்தால் சிக்கரி சரி செய்யும்.

தொகுப்பு: எஸ்.இராமதாஸ்