Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதயத்தைக் காக்கும் கறிவேப்பிலை!

நன்றி குங்குமம் டாக்டர்

நம் உணவில் கறிவேப்பிலை கிடந்தால் அதை தூர எடுத்து வீசுவதுதான் நம் பழக்கம். ஆனால் அந்த கறிவேப்பிலையில் எவ்வளவு ஆரோக்கியம் கொட்டிக் கிடக்கிறது தெரியுமா.கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்திற்கும், தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு ஆன்டி - பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமல்லாமல் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது.

நம் உணவு கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத பொருளாக பெரும்பாலான உணவுகளில் சுவை மற்றும் வாசனைக்காக சேர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் கறிவேப்பிலை நறுமண மூலிகை மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நன்மை அளிக்கும் கறிவேப்பிலையில் கார்போ ஹைட்ரேட்ஸ், ஃபைபர், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்ஸ் என பல அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அமினோ ஆசிட்கள் இதில் அடங்கி உள்ளன. எனவே கறிவேப்பிலை இதய ஆரோக்கியத்துக்கும், தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு, ஆன்டி - பாக்டீரியல் மற்றும் வயிற்றுப்போக்கைத் தடுப்பது மட்டுமில்லாமல் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல சிறந்த செரிமான விளைவுகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலை நீரிழவு மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்கும் உடலின் பொதுவான வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் நன்மை பயக்கும்.

நன்மைகள்

கறிவேப்பிலை உடலின் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை குறைத்து கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மேம்படுத்துகிறது. கறிவேப்பிலையில் காணப்படும் ஃபைபர் சத்து செரிமானத்தை மெதுவாக்குவதால் வளர்சிதை மாற்றம் சீக்கிரமாக நடைபெறுவதைத் தடுக்கிறது. கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. இது ப்ரீரேடிக்கல்ஸ்களால் கொலஸ்ட்ரால் ஆக்ஸிடேஷனை தடுப்பதன் மூலம் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்கிறது. இதனால் எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உவுகிறது.

கறிவேப்பிலை தீங்கு விளைவிக்கும் நச்சுகளை சுத்தப்படுத்துவதோடு கலோரிகளை எரித்து கொழுப்பு சேர்வதை தவிர்க்க உதவுவதால் எடையை பராமரிக்க உதவுகிறது.கறிவேப்பிலை இளநரையை தடுக்க மற்றும் முடி நரைப்பதை தாமதப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல் பொடுகுப் பிரச்னை மற்றும் முடி சேதத்தையும் சரி செய்கிறது.

தொகுப்பு: பொ.பாலாஜி