Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

வெங்காயத்தில் எத்தனை எத்தனையோ நற்குணங்கள் உள்ளன. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் ஒரே குணத்தை கொண்டவைதான். வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டைசல்பைட் எனும் எண்ணெய்தான் அவற்றை அரிந்தால் நமக்கு கண்ணீர் வரவைக்கிறது. வெங்காயத்தின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

*பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

*வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே உடல் பருமன் உள்ளவர்கள் வெங்காயத்தை நிறைவே எடுத்துக் கொள்ளலாம்.

*பச்சை வெங்காயத்தை தயிர் சாதத்துடன் சேர்த்து உண்டால் நல்ல தூக்கம் வரும்.

*வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. செரிமானத்துக்கு உதவுகிறது.

*வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்டுத் தரும்.

*தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காய சாறை தினமும் அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

*வெங்காயச்சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுகளில் ஏற்படும் வலி உள்ள இடத்தில் தடவிவர குணமாகும்.

*நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

*வெங்காய சாறோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

*வெங்காயச் சாறையும், தேனையும் சமஅளவு கலந்து கண் வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

*வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப் போட தொண்டை வலி குறையும்.

*வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும்.

*சிறிய வெங்காயத்தில் இன்சுலின் அளவு நிறைந்து உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

*தலையில் திட்டு திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், சின்ன வெங்காயச் சாறு எடுத்து தடவி வர முடி வளரும்.

*வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச்சாறு சாப்பிட்டு வர வலிப்பு குறையும்.

*வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து வர காச நோய் குறையும்.

*வெங்காயச் சாறோடு சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

*தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

*வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வர தாது பலமாகும்.

*வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

*வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி குணமாகும்.

*படை தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவி வர மறைந்துவிடும்.

*திடீரென முர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகர வைத்தால் முர்ச்சை தெளியும்.

தொகுப்பு: ரிஷி