Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொத்துமல்லியின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

கொத்துமல்லி இலைகள் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டு உள்ளது. கொத்தமல்லி தாவரத்தின் தண்டு, இலை மற்றும் வேர் என அனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை. கொத்தமல்லி இலைகளை இந்திய மக்கள் தங்கள் சமையல்களில் அதிகமாக பயன்படுத்துவது உண்டு. கொத்துமல்லி விதைகள் தனியா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மூலிகை கி.மு 5000 க்கு முன்பு இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொத்துமல்லி இலைகளின் நன்மைகள் பார்ப்போம். கொத்துமல்லி இலைகளில் விட்டமின் ஏ, சி என எல்லா விட்டமின்களும் உள்ளன. கொத்துமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், விட்டமின் கே, பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

கொத்துமல்லி இலைகளில் 11 அத்தியாவசிய எண்ணெய்கள் காணப்படுகிறது. இதில் நிறைவுற்ற கொழுப்பு மிகக் குறைந்த அளவே உள்ளது. இதில் லினோலிக் அமிலம் காணப்படுகிறது. இதில் ஏராளமான சுகாதார நன்மைகள் காணப்படுகிறது. 100 கிராம் கொத்தமல்லி இலைகளில் 31 கிராம் கலோரி, 2 கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 146 மி.கி கால்சியம், 5.3 மி.கி. இரும்பு, 4.7 கிராம் நார்ச்சத்துக்கள், 24 மி.கி. வைட்டமின் சி, 635 மி.கி. வைட்டமின் ஏ போன்றவை உள்ளன.

ஆரோக்கியமான கண் பார்வைக்கு கொத்தமல்லி இலைகள் சிறந்தது. ஏனெனில் கொத்தமல்லி இலைகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் போன்றவை உள்ளன. இது நமக்கு நல்ல கண் பார்வையை அளிக்கிறது. கொத்தமல்லியின் தினசரி நுகர்வு வயது தொடர்பான மாகுலர் சிதைவை தாமதப்படுத்தவும், வெண்படலத்தை குணப்படுத்தவும் உதவுகிறது.

தொகுப்பு: ரிஷி